மரியாதையே கொடுக்கல.. இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையே இல்ல.. வெளியேறிய நடிகை..!
பிரபுதேவா ஷோவில் கலந்து கொள்ள வந்த நடிகைக்கு துளிகூட மரியாதை தராததால் வெளியேறி இருக்கிறார்.
காலம் போற போக்கில் மக்களும் அவரவர் வாழ்க்கையை மேம்படுத்த ஓடி ஓடி உழைத்து வருகின்றனர். மன அழுத்தம், வேதனை, காதல் தோல்வி, குடும்ப சுமை என அனைத்தையும் தலையில் போட்டு புழுங்கி கொண்டு இருக்கின்றனர். இதில் சற்றும் ஒய்வு இல்லாத மக்களை நிகழ்ச்சி மூலம் மகிழ்விக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தற்பொழுது இரண்டு நிகழ்ச்சி பிரபலம், ஒன்று சண்டே "ஹாப்பி ஸ்ட்ரீட்" மற்றும் இசையமைப்பாளர்களின் கான்சட். இதுவரை ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, யுவன்சங்கர் ராஜா போன்றோரின் கான்சட் நடைபெற்று பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பிரபல நடன கலைஞரின் கான்சட் நடைபெற உள்ளது. அந்த காண்சட்டில் 'துளி கூட எனக்கு மரியாதை இல்லை' என கூறி வெளியேறி இருக்கிறார் நடிகை ஒருவர்.
கன்னத்தில் குழி அழகான தோற்றம், பார்ப்பவர்களை தன் சிரிப்பாள் மயக்கிய நாயகி என்றால் அது நடிகை ஸ்ருஷ்டி. இவரை பற்றி நினைவு கூற வேண்டுமானால் ஜி.வி பிரகாஷுடன் நடித்த "அன்பே அன்பே" பாடல். இதில் அவரது நடிப்பின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்பதை போல் இருக்கும். இதை விட ஸ்ருஷ்டியை பிரபலமடைய செய்தது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி தான். இதில் "நீ பேசு எங்கம்மா பேச சொன்னிச்சி" என்று சொல்லி, கோமாளியான புகழிடம் வம்பிழுத்து அடிக்கடி சண்டை போடுவார். இது மக்கள் மத்தில் அவருக்கென தனி ரசிகர்களை உருவாக்கியது. அதிலும் ஸ்ருஷ்டியின் சிரிப்பு தான் ஸ்பெஷல், சிரிக்க ஆரம்பித்தால் அரை மணி நேரம் விடாமல் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பார்.
இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!
"யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல்" ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. அதன் பின், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'மேகா' திரைப்படத்தில் நடித்து பல கலவையான விமர்சனங்கள் பெற்ற இவர் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இன்னும் பல பட வாய்ப்புகள் குவிந்தும் வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை பிரபுதேவா நடத்தும் "Dance Concert" நடைபெற இருக்கிறது. அதில் ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அந்த ஷோவில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இந்த முடிவுக்கு பிரபுதேவா காரணம் இல்லை, ஏற்பாட்டாளர்களே என வேதனையை பகிர்ந்து இருக்கிறார்.
மக்கள் ஆர்வமாக பிரபு தேவா கான்சட்டிற்கு டிக்கெட் பெற்று வரும் நிலையில் ஸ்ருஷ்டி இப்படி கூறி இருப்பது ரசிகர்களை தயக்கமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: உங்களுக்கு இந்தி தவிர வேற என்ன தெரியும்.. எங்கள கட்டாய படுத்த தெரியும்..! இப்ப பிராகாஷ் ராஜ் கிட்ட சிக்குனது யாரு..?