கண்ணே பட்டுடும்.. கணவர் ஆண்டனி தட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய தல பொங்கல் போட்டோஸ்!
கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் இணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் இணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது 15 நீண்டகால நண்பர் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற இவரது திருமணத்தில் விஜய், த்ரிஷா, நானி ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் கணவர் ஆண்டனி தட்டில் உடன் இணைந்து தல பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தனது மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி கலந்து கொண்டார்.
அதில், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் எங்களது அலுவலகத்தில் எங்களது தல பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கொண்டாடத்தில் அவருடன் வளர்ப்பு நாயும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் இளஞ்சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் எலுமிச்சை பச்சை நிற சேலை அணிந்து பார்க்க அழகாக இருந்தார். இவரைத் தொடர்ந்து அவரது கணவர் ஆண்டனி தட்டில் மஞ்சள் நிற குர்தா மற்றும் வெள்ளை வேஷ்டியில் ஸ்டைலாக இருந்தார்.
அதில் எங்களது அலுவலகத்தில் எங்களது தல பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கொண்டாடத்தில் அவருடன் வளர்ப்பு நாயும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் ஆகியோர் பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதோடு மியூசிக்கல் சேர் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் பேபி ஜான் என்ற ஹிந்தி படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் போதுமான அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டேட்டிங்... விஜய் மறைத்த சீக்ரெட்... ஜோடியை பாங்காங் அழைத்துச்சென்ற மேனேஜர்..!