×
 

கீர்த்தி சுரேஷின் டேட்டிங்... விஜய் மறைத்த சீக்ரெட்... ஜோடியை பாங்காங் அழைத்துச்சென்ற மேனேஜர்..!

கோவாவில் நடந்த திருமணத்திற்கு முன்பு, அவர்கள் 15 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்ததாகக் கூறியுள்ளார் கீர்த்தி.

‘அன்னம் தண்ணி இல்லாம கூட உழைக்கிறாரு’என்று கிராமபுறங்களில் சொல்வார்களே… அது முற்றிலும் பொருந்துவது கீர்த்தி சுரேஷுக்குதான். தெலுங்கு தமிழ் இரண்டு லாங்குவேஜும் அவருக்கு ரத்ன கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான், ரிவால்வார் ரீட்டா, கன்னிவேதி படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகளாக அதை எப்படி ரகசியமாக வைத்திருந்தார்கள் என்பதை இப்போது கீர்த்தி சுரேஷே பகிர்ந்துள்ளார்.

கோவாவில் நடந்த திருமணத்திற்கு முன்பு, அவர்கள் 15 ஆண்டுகளாக  டேட்டிங் செய்து வந்ததாகக் கூறியுள்ளார் கீர்த்தி. அவர் ஆண்டனியுடன் டேட்டிங் செய்வதை திரையுலகில் உள்ள சிலருக்கு மட்டுமே தெரியும். ஆண்டனி தட்டிலை 'நான் 12வது வயதில் இருந்தே தெரியும். அவர் என்னைவிட 7 வயது மூத்தவர்.

இதையும் படிங்க: 2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?

ஆனால், கீர்த்தி சுரேஷ் தனது காதலை ரகசியமாக வைத்திருந்துள்ளார். “யாருக்கும் தெரியாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். சினிமா இண்டஸ்ட்ரியில் கூட, சமந்தாவுக்கு தெரியும். விஜய் மேனேஜர் ஜெகதீஷ் ஆரம்பத்திலிருந்தே எங்கள் காதலின் ஒரு பகுதியாக இருந்தார். அட்லீ, ப்ரியா, விஜய் சார், கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி... மிகச் சில நண்பர்களுக்கு எங்கள் காதல் தெரியும்.

ஏப்ரல் 2022 முதல் முதல் திருமணத்தைத் திட்டமிடுவதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதே போல் எங்கள் காதலை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. உண்மையில் நல்லவர்கள். நாங்கள் இருவரும் எங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்தவரை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நடப்பதில்லை. எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம் கூட 2017-ல் ஜெகதீஷ் எங்களை பாங்காக் அழைத்துச் சென்றதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நாங்கள் முதல்முறையாக ஒரு தனிப் பயணம் சென்றோம்,” என்று அவர் கூறினார்.

கீர்த்தி 12 ஆம் வகுப்பு படிக்கும் போது ஆர்குட் மூலம் ஆண்டனியை பின்தொடர்ந்ததாகவும் கத்தாரில் பணிபுரிவதாகவும் கூறினார். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கீர்த்தி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி. அதற்கு முன்பும் அவர்கள் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்தனர். கடைசியாக திருமணம் செய்துகொள்வது அவர்கள் நீண்ட நாட்களாகக் காத்து வந்த கனவு என்று கூறுகிறார் கீர்த்தி.

இதையும் படிங்க: 46 வயதில் இது தேவையா? பூமிகா வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share