காட்டுக்கு நடுவே ட்ரெண்டிங் நாயகி மமிதா பைஜூ எடுத்த கியூட் போட்டோ ஷூட்!
தென்னிந்திய திரையுலகில் ட்ரெண்டிங் நாயகியாக மாறியுள்ள நடிகை மமிதா பைஜூ காட்டுக்குள் எடுத்து கொண்ட, கியூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...
கேரள மாநிலம், பல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துளள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை என்கிற அடையாளத்தோடு இப்போது அறிமுகமாகி உள்ளார் மமிதா பைஜூ.
2017-ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான 'சர்வோபரி பலக்காரன்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல மலையாள படங்களில் நடித்தார்.
ஆப்பத்தில் இவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும்... கடந்த ஆண்டு வெளியான 'பிரேமலு' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: கண்ணே பட்டுடும்.. கணவர் ஆண்டனி தட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய தல பொங்கல் போட்டோஸ்!
இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்களையும் மமிதா கவர்ந்தார்.
மமிதா, இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக நடிக்க கமிட் ஆனார்.
ஆனால் இந்த படம், ட்ராப் ஆனதால்... 'வணங்கான்' படத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான 'ரிபெல்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தற்போது இவர் விஷ்ணு விஷாலின் 21-ஆவது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதே போல் தளபதி 69 படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் நாயகியாக மாறியுள்ள மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மமிதா பைஜூ, காட்டுக்கு நடுவே கியூடாக ட்ரெஸ் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டை பட்டனை கழட்டி விட்டு கிக்கேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!