ஒழுங்கா போய் படிங்கடா... இன்ஜினியர் ஆகுறதுலாம் கஷ்டம் டா..! பிரதீப் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட இன்ஸ்டா பெண் ..!
சமூகத்தை சீர்கொலைக்கும் படம் தான் டிராகன் படம் என பெண் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் படம் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் பல நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த பிரதீப் ரங்கநாதனின் "டிராகன்" திரைப்படம் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இதனால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள 'டிராகன்' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...
பலரும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் சூழலில், இன்ஸ்டா பெண் ஒருவர், இப்படத்தையும், இப்படத்தின் நடிகரான பிரதீப் ரங்கநாதனியும் விமர்சித்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் அந்த பெண், இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த அனைவரும், வாழ்க்கையில என்ன பண்ணுவது என்று தெரியாமல், எப்படி உருப்புடுவது என்பது தெரியாமல் இருந்தீங்கன்னா.. பிரதீப் அண்ணா உங்களுக்கு ப்ளோ ஜாப் கொடுத்துட்டு போவாரு .. இந்த படத்தில் வருவதை பார்த்து 42 அரியர் வைத்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தீர்கள் என்றால், கண்டிப்பாக பிச்சைதான் எடுக்கனும். அதுக்கும் மேல மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம் படிச்சவங்களே வேலைதேடி கஷ்ட்டப்பட்டு இருக்கின்றனர், இது தெரியாமல் இப்படி பட்ட படத்தை எடுத்து, சமூகத்தை சீர்கொலைக்கும் படம் என்றால் இந்த படம் தான் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இதனை பார்த்த பலர், அப்பெண்ணின் பேச்சுக்கு ஆதரவு அளித்தாலும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: டாப் கியரில் 'குடும்பஸ்தன்' படம்... வசூல் நிலவரம் என்ன தெரியுமா.?