உருவாகும் சிம்புவின் 50-வது படம்.. இவரா இயக்குகிறார்.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சிம்புவின் 50ஆவது திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக பட குழு அறிவுள்ளது.
திரைப்படங்கள் வெளியாகிறதோ, இல்லையோ எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத செய்திகளுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சிலம்பரசன் என்கின்ற சிம்பு. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகி இருந்தாலும், 2002-ம் ஆண்டு காதல் அழிவதில்லை படம் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார் சிம்பு.
கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் பத்து தல. கலவையான விமர்சனங்களை பெற்ற அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார். இது சிம்புவின் 47-வது படமாகும். ஓ மை கடவுளே, ட்ராகன் ஆகிய படங்களை இயக்கி உள்ள அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அதேபோன்று பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 49-வது படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. இந்த சூழ்நிலையில் சிம்புவின் 50வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் பெரிதும் பேசப்பட்டது. இன்று நண்பகல் 12.12 மணிக்கு அதுபற்றிய அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், விஜயசாந்தி: மனம் கவர்ந்த 3 'ஹீரோயின்'கள் பற்றி 'தெலுங்கு சூப்பர் ஸ்டார்' பாலகிருஷ்ணா!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் விலகிக் கொண்ட நிலையில், ஆத்மன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சிம்பு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அதன் முதல் தயாரிப்பாக சிம்புவின் 50-வது படம் அமைந்துள்ளது.
குட்டிவயது சிலம்பரசன் கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி நிற்பதாக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஒருகாலகட்டத்தில் படபிடிப்புகளுக்கு சிம்பு சரியாக செல்வதில்லை என்ற புகார்கள் இருந்தன. இன்று அடுத்தடுத்து 4 படங்கள் வரிசைகட்டி நிற்கும் வகையில் சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ் இதுவென்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளாடை தெரிய.. ஓவர் கோட் போட்டு வெட்டிங் பார்ட்டியில் கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்!