பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்கள் தான். மிக முக்கியமான உலகத் தலைவர்களின் வருகையின்போது தான் பிரதமரே நேரடியாக சென்று விமான நிலையத்தில் அவரை வரவேற்பார். அந்த வகையில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி இந்தியா வந்தபோதும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றார். இது அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி வந்த போது அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போல விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு தலைவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்று இருக்கிறார்.
இதையும் படிங்க: "நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்" - ராகுல் காந்தி பாய்ச்சல்

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "எனது சகோதரர் கத்தார் மன்னர் அமீரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அவருடைய இந்திய பயணம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அவரை நான் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு கத்தார் அமீர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கத்தாரில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, கத்தார் அமீரை கௌரவிக்கும் வகையில் பிரதமரே நேரில் சென்று வரவேற்றதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது நினைவு கூரத் தக்கது.
இதையும் படிங்க: மோடியை பாராட்டிய சசிதருர்.. காங்கிரஸ் காரனாகவே இருக்க முடியாது - சசிதரூர் விளக்கம்