கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்த படங்களில் தனது முழு உழைப்பையும் செலுத்தி முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான்.
ரூமில் படுக்க கூட இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் நீண்ட நாட்களாக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான 'முகப்புத்தகம்' என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கேரள முதல்வரை சந்தித்த சிவகாரத்திகேயன்.. இதுதான் காரணமாம்!!

இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, ரஜினி முருகன், வேலைக்காரன், கனா, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, Mr.லோக்கல், ஹீரோ, டாக்டர், ப்ரின்ஸ், டான், மாவீரன், அமரன், அயலான், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்பொழுது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி". இந்த படம் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டு படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இப்படி இருக்க, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி வருவதாகவும் படு தோல்விகளை சந்தித்து வருவதாகவும் சில நடிகர்கள் தங்களது ஆதங்கத்த்தை சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரரான சாய் சுதர்ஷனை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவரது பதிவில் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் விளையாடும் விதத்தை பாராட்டி இருக்கும் சிவகார்த்திகேயன் 'உங்களை விரைவில் இந்திய அணி ஜெர்சியில் பார்க்க காத்திருக்கிறேன்' என கூறி இருக்கிறார். இந்த பதிவால் பலரும் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் கூடிய விரைவில் வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.