அதாவது, போஸ்டரை பார்த்த வைஜெயந்தி இது சண்முகத்தின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். அதே போல் இன்னொரு பக்கம் போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து உயிரோட இருக்க என் புருஷனுக்கு யாருடா போஸ்டர் ஒட்டியது என சத்தம் போடுகிறாள்.
சண்முகம் யாரோ தப்பா என் நம்பரை கொடுத்து போஸ்டர் நடிச்சிருக்காங்க என்று சொல்லும் சண்முகம் அந்த பெண்ணிடம் நீங்க எந்த ஊரு, எங்க இருக்கீங்க? உங்க புருஷன் எங்க இருக்காரு என்று கேட்டு தெரிந்து கொண்டு கிளம்பி செல்கிறான்.

மறுபக்கம் வைஜெயந்தி அவன் கிடைச்சிட்டா அவ்வளவு தான்.. நம்ப திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போய்டும் என சண்முகத்தை மடக்க கிளம்பி வருகிறாள். அதற்குள் இங்கே வீட்டிற்கு வந்த சண்முகம், அந்த ரவுடியை பிடித்து விடுகிறான். முத்துப்பாண்டி உண்மையை ஒத்துக்கிட்டா உனக்கு தண்டனை குறையும் என சொல்லி மிரட்ட அவன் நான் தான் நகையை திருடுனேன்.. தப்பிக்க வழியில்லாமல் அந்த பொண்ணோட பேக்கில் போட்டுட்டேன் என்று சொல்லி ஆஜர் ஆகி விடுகிறான்.
இதையும் படிங்க: கைது செய்யப்படும் வீரா.. சண்முகம் சதியை முறியடிக்க முறியடிப்பானா? அண்ணா சீரியல் அப்டேட் !
உடனே இந்த விஷயம் அறிந்த வைஜெயந்தி ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு அப்பவே இந்த பொண்ணு இப்படி பண்ண வாய்ப்பு இல்லனு ஒரு சந்தேகம் இருந்தது.. FIR போடலல.. அதுவரைக்கும் நல்லது என்று நல்லவள் வேஷம் போட்டு வீராவை விடுவிக்கிறாள்.

இந்த விஷயம் அறிந்து கௌதம் கோபம் அடைகிறான். வீட்டில் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கிறான். வைஜெயந்தி அடுத்து என்ன பண்ணுவது என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய, அண்ணா சீரியலை பாருங்கள்.
இதையும் படிங்க: இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம் - முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன்! அண்ணா சீரியல் அப்டேட்!