கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலக அளவிலான தலைமை மத குரு "போப் ஆண்டவர்" என்று அன்புடன் அழைக்கப்படும் போப் பிரான்சிஸ். 88 வயதான இவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று அவருடைய உடல்நிலை, சுவாசம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுடன் மிகவும் கவலைக்கிடமாக, மரணத்தின் வாயில் அருகே... என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அவர் நலம் பெறுவதற்காக உலகளாவிய பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் "லேசான சிறுநீரக பிரச்சினை கவலைக்கு உரியது அல்ல" என்று தலைமை பீடமான வத்திகான் கூறி இருக்கிறது. "ஆஸ்துமா சுவாச தாக்குதல் எதுவும் இல்லை. சில ஆய்வக சோதனைகள் மேம்பட்டு இருப்பதாகவும்" அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மரணத்தின் அருகே போப் ஆண்டவர்.. குணம் அடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை..!

"போப் தொடர்ந்துஆக்சிஜன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் மருத்துவர்கள் "முன் கணிப்பை" இன்னும் வெளியிடாமல் இருப்பது புத்திசாலித்தனம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக இரண்டு நாட்களில் போப்பின்உடல்நிலை குறித்த மிகவும் நேர்மறையான அறிக்கையாகும்.
இருப்பினும் அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. டாக்டர்கள் எந்தவிதமான முன்னறிவிப்பையும் வழங்கும் நிலையில் இல்லை.
போப் பிரான்சிஸ் சாதாரணமாக சாப்பிட்டு வருவதாகவும் நகர முடியும் என்றும் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். "அவர் படுக்கையில் இல்லை; அவருக்கு காய்ச்சல் இல்லை;. காசாவில் போர் நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலான நாட்களில் அவர் பெரும்பாலான மாலை வேலைகளில் ஒரு கத்தோலிக்க திருச்சபைக்கு அழைப்பு விடுத்து வருகிறார். சமீபத்திய நாட்களில் அவர் செய்ய முடிந்த முதல் அழைப்பு இது என்று கருதப்படுகிறது.

திங்கட்கிழமை இரவில் ரோமில் உள்ள கார்டினால்கள், வத்திகான் கியூரியா உறுப்பினர்கள் மற்றும் ரோம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த மத குருமார்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய செயின் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வெளியே கூடினர். இனி அவர்கள் ஒவ்வொரு நாள் மாலையும் ஜெபமாலை ஓதுவதற்காக இதுபோல் ஒன்று போடுவார்கள்.
நேற்று மாலை பிரார்த்தனைக்கு வத்திக்கான் வெளியுறவுச் செயலாளரான கார்டினால் பலோலின் தலைமை தாங்கினார்.
இளம் வயதிலேயே பிரான்சிஸ் நுரையீரல் அழற்சியான ப்ளூ ரிஷி நோயால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதி அளவு அகற்றப்பட்ட பிறகு பாக்டீரியா வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடிய நுரையீரல் தொற்று நிமோனியாவால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்.

தனது 12 ஆண்டு பதவிக்காலத்தில் பலமுறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறார். மார்ச் 2023-ல் இதே மருத்துவமனையில் மூச்சு குழாய் அழற்சிக்கு சிகிச்சை பெற்றதும் நினைவு கூரத்தக்கது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் முதல் லத்தீன் அமெரிக்கர் மற்றும் முதல் ஜேசுட் ஆவார்.
இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் உடல்நிலை மீண்டும் மோசம்; பதவியை ராஜினாமா செய்வாரா?