வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை அங்கேயே முடிக்காமல் வெளியுலகிற்கு பகிரங்கமாய் காண்பித்து அதனை வைத்து டிஆர்பி - யை அதிகப்படுத்தி சுவாரசியமான பிரச்சனைகளை மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டு சேர்த்த நிகழ்ச்சி தான் "சொல்வதெல்லாம் உண்மை". இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான அருமையான படம் தான் "அருவி".
இந்த படத்தில், தான் வேலை செய்யும் இடத்திலும், தோழியின் தகப்பனாரும், ஒரு தனி மனிதரும் இணைந்து அருவி என்ற பெண்ணுடன் பாலியல் ரீதியான பழக்கத்தில் ஈடுபட்டு இருப்பர். அப்பொழுது தனது வாழ்க்கையை படுக்கையில் பங்குபோட்ட மூன்று காமுகன்களையும் இதே போன்ற ஷோவில் நிற்க வைத்து இருப்பார் அருவி. அந்த நிகழ்ச்சியில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன செய்கிறார்கள் என்பதை தெளிவாக காண்பித்து இருப்பர்.

அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியால் பல மீம்ஸ் கிரியேர்ட்டர்களின் வாழ்க்கை மாறியுள்ளது என்றே சொல்லலாம். மேலும், இதில் தொகுப்பாளினியாக இருந்த லஷ்மி ராமகிருஷ்ணன் தான் மீம்ஸ்களில் வளம் வந்த ஒரே கதாநாயகி ஆவார்.
இவரது டையலாக்குகள் தான் மிகவும் ஃபேமஸ், குறிப்பாக, ஏம்மா புதருக்குள்ள போய் இப்படியெல்லாம் பண்றதுதான் காதலாம்மா என்ற டையலாகும், என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா என்ற டையலாக்கும், "மேடம் இது நடிப்பு மேடம்", ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளத்து இருக்கமா என்ற டையலாக்குகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஆஷிகா ரங்கநாதனா இது..! கிளாமரில் இருந்து மாடர்ன் அழகியாக புதிய அவதாரம்..!

மேலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் டயலாக்குகளை டப்மேஷ் செய்தும் வெளியிடுவர். குறிப்பாக "மணி ஏய்.. என பெண் அழூவதும் அதற்கு தொகுப்பாளினி லஷ்மி, மணி மாமா இல்ல அண்ணன் என சொல்வதெல்லாம்" ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருந்தது.
இப்படி இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மிகவும் ட்ரெண்டான ஷோதான் இந்த சொல்வதெல்லாம் உண்மை. இதில் கள்ளக்காதல், குடும்ப தகராறு, காதல் வாழ்க்கை, உறவினர்கள் சொத்து பிரச்சனை என எந்த கேஸ் வந்தாலும் அதனை ஆராய்ந்து நாங்க இருக்கோம்... எங்கள் டீம் இருக்கு... என சொல்லி தனியார் நீதிமன்றத்தை உருவாக்கியதை போல் செயல்பட்டு கொண்டு இருந்தனர்.

இப்படி இருக்க, சமீபத்தில் ஒரு தனியார் சேனலில் லஷ்மி ராமகிருஷ்ணனை செய்தி தொகுப்பாளர் உங்களுக்கு எதற்கு இந்தவேலை நீங்கள் என்ன ஜட்ஜா... இந்த பிரச்சனைகளை நீங்கள் சரிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த வேலைகளை நீங்கள் செய்தால் அப்பொழுது கோர்ட் எதற்கு? போலீஸ் எதற்கு..? என்றெல்லாம் கேள்வி கேட்டு அவரை வெளுத்து வாங்கினார். இப்படி பல சிக்கல்களை கடந்த இந்த நிகழ்ச்சி பலபேரினுடைய வாழ்க்கையும் மாற்றி உள்ளது என்றே சொல்லாம்.

இந்த சூழலில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த இந்த நிகழ்ச்சி சிறிது காலம் ஒளிபரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் அதற்கான புகார் உள்ள ஆட்களை தேர்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. இப்படி இருக்க தற்பொழுது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பகுதியில் இருந்து இதற்கான பிரச்சனை உள்ள குடும்பங்களை போஸ்ட் போட்டு அழைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவப்பு நிற பிகினி உடையில் மிதமிஞ்சிய அழகில் ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்!