×
 

நினைவானது ரசிகர்களின் கனவு..! நிவின் பாலி ராக்...! மலையாள இன்டஸ்ட்ரி ஷாக்..!

உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மலையாள நடிகர் நிவின் பாலி, தற்போது முற்றிலுமாக எடையை குறைத்து படுஸ்டைலாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"கண்ணு செவக்கனும் பள்ளு கடிக்கணும்" என்ற பாடல் வரிகள் கேட்டாலே அனைவரது நினைவிற்கும் வருவது மலையாள நடிகரான நிவின் பாலி.. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் கனகச்சிதமாக ஒருவருக்கு பொருந்தும் என்றால், அது இவருக்கு தான். நடிகர்கள் என்றால் பெண்  ரசிகைகள் அதிகம் இருப்பர், ஆனால் நிவின் பாலிக்கு சற்று வித்தியாசம், ஏனெனில் இவருக்கு ஆண்கள் ரசிகர்கள் மிக அதிகம். உதாரணம் இவரது ஸ்டெயிலை பயன்படுத்தாத ரசிகர்கள் இல்லை, குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக தாடி வளர்க்க காரணமானவர் இவரே. 

இந்த நிலையில், பிரேமம் படத்திற்கு பிறகு இவருக்கு அமைந்த பல படங்கள் தோல்வியாகவே முடிந்தது. இதில் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த நிவின் பாலி, தனது உடலை சரியாக கவனிக்காமல், உடல் பருமனாக மாற, அத்தோற்றத்தோடு நடித்த படங்களும் தோல்வியிலேயே முடிந்தது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. பின் விசாரணையின் இறுதியில் நிவின் குற்றமற்றவர் எனத் தெரிந்ததும் ரசிகர்கள் மகிழ்ந்தனர். 

இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு.. அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதால் மகிழ்ச்சி..!

இதனிடையே நிவின் பாலி, நள்ளிரவு 12 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் உடல் பருமனை முழுவதுமாக குறைத்து, கச்சிதமான தோற்றத்தில் இருந்த நிவினை பார்த்த ரசிகர்கள் இனி வரும் படங்களில் நிவின் கலக்குவார் என பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 


உடல்பருமன் அதிகமாக இருந்த சிம்பு, ரசிகர்களின் கோரிக்கையை எண்ணி பார்த்து உடல் எடையை குறைத்து மாஸ் காட்டியது போல் தற்பொழுது, நிவின் பாலியும் மாஸ் காட்டி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே சிரிப்புல வைரத்துக்கு சொந்தக்காரியான மோனலிசா...! அன்று பாசிமணி விற்ற பெண்.. இன்று இந்தியாவை கலக்கும் செலபிரிட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share