Anna Serial: நியூ என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்.! வீராவுக்கு விழுந்த அறை! அண்ணா எபிசோட் அப்டேட்!
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீராவுக்கு போலீசில் வேலைக்கு சேர லெட்டர் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீராவுக்கு போலீசில் வேலைக்கு சேர லெட்டர் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீரா போலீசாவதால் சண்முகம் அவளுக்கு செயின் எடுத்து தருவதாக சொல்கிறான். இதற்காக இவர்கள் எல்லோரும் கடைக்கு கிளம்பி செல்கின்றனர். இசக்கி மட்டும் வீட்டில் இருக்க அவள் நகையை போட்டோ எடுத்து அனுப்புங்க என்று சொல்லி அனுப்புகிறாள்.
அதைத் தொடர்ந்து மறுபக்கம் வைஜெயந்தி என்ற போலீஸ் அதிகாரி ( ADSP ) அறிமுகம் செய்யப்படுகிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன அவர் சென்னையில் தவறுதலாக ஒரு என்கவுண்டர் செய்த காரணத்தினால் திருச்செந்தூர்க்கு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
இதையும் படிங்க: ரத்னா கழட்டி வீசிய தாலியை... வீரா கழுத்தில் கட்ட முடிவு செய்த வெங்கடேஷ்! பரபரப்பான தருணத்துடன் 'அண்ணா' சீரியல் அப்டேட்!
மேலும் அவரது மகன் கௌதம் ஒரு பைக் ரைடர் எனவும் அறிமுகமாகிறான். நீங்க வீட்ல எல்லாம் ஏற்பாடு பண்ணி வைங்க, நான் அதுக்குள்ள ஒரு ரைட் போய்ட்டு வரேன் என வண்டியில் கரடு முரடாக பயணம் செய்கிறான்.
இங்கே கடைக்கு வந்த சண்முகம் குடும்பத்தினர் ஒரு நகையை தேர்வு செய்து அதை போட்டோ எடுத்து இசக்கிக்கு அனுப்ப முயற்சிக்க கடைக்குள் நெட்வொர்க் கிடைக்காத காரணத்தினால் கனி மற்றும் வீரா என இருவரும் வெளியே வருகின்றனர்.
அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த கௌதமால் கனி கீழே விழுந்து அவளுக்கு கையில் காயம் ஏற்படுகிறது. இதனால் வீரா ஓடிப்போய் கௌதம் வண்டியை பிடித்து சாவியை எடுத்து மன்னிப்பு கேட்க சொல்ல கௌதம் வீராவை அறைய இதை பார்த்த சண்முகம் என் தங்கச்சி மேலயா கையை வச்ச என்று கெளதமை அடிக்கிறான்.
யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என வைஜெயந்நி இந்த இடத்திற்கு என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: கூடும் பஞ்சாயத்து.. ரவுடிகளுடன் என்ட்ரி கொடுக்கும் வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்