கூடும் பஞ்சாயத்து.. ரவுடிகளுடன் என்ட்ரி கொடுக்கும் வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடே குறித்த அப்டேட் பற்றி பார்க்கலாம்.
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ் மற்றும் ரத்னாவுக்கு விவாகரத்து வாங்க முடிவெடுக்கப்பட்ட நிலையில்... இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சண்முகம் மற்றும் முத்துப்பாண்டி என இருவரும் பஞ்சாயத்திற்கு வர சொல்லி வெங்கடேஷ் வீட்டிற்கு வருகின்றனர். முத்துப்பாண்டி நீ வர வேண்டாம் நான் போய் சொல்லிட்டு வரேன் என்று சொல்கிறான்.
சண்முகம் நான் ஏன் வர கூடாது என்று கேட்க நீ வந்தா கையை நீட்டிடுவ, வேண்டாம் என்று சொல்கிறான். இதையடுத்து முத்துப்பாண்டி உள்ள வந்து பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். வெங்கடேஷின் அப்பா அம்மா நாங்க எதுக்கு பஞ்சாயத்துக்கு வரணும் என சத்தம் போடுகின்றனர்.
வெங்கடேஷ் கையில் கட்டையுடன் முத்துபாண்டியை அடிக்க வர முத்துப்பாண்டி கட்டையை பிடித்து நான் இப்போ போலீசா வரல சண்முகம் மச்சானா வந்திருக்கேன் என்று சொல்கிறான். இதற்கிடையில் சண்முகம் உள்ளே புகுந்து அவனை அடித்து நாளைக்கு பஞ்சாயத்து வரணும் என்று சொல்லி வருகிறான்.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
அடுத்ததாக சண்முகம் வீட்டில் எல்லாரும் பஞ்சாயத்துக்கு கிளம்ப சண்முகம் கத்தியை எடுத்து கொள்ள பரணி அதை பார்த்து திட்டி கத்தியை வைக்க சொல்கிறாள். இதனால் கத்தியை எடுத்து வைக்கும் சண்முகம் அவள் சென்ற பிறகு மீண்டும் எடுத்து கொள்கிறான். அதே போல் முத்துபாண்டியும் துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்புகிறான்.
வெங்கடேஷ் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து உதவி கேட்க அவர் நாலு ரவுடியுடன் பஞ்சாயத்துக்கு வர சொல்கிறார், வெங்கடேஷ் அதே போல் வந்து இறங்கி தனக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறான். இதனால் சண்முகம் அவனை அடிக்க பாய்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்ட சண்முகம்.. பரணி செய்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!