ஏற்காட்டிற்கு அழைத்த ஹீரோ... என் வாழ்க்கையே நாசமா போச்சு... நடிகை ஆவேசம்!
அட்ஜஸ்ட்மெண்டால் என் சினிமா வாழ்க்கையையே பாழாகி விட்டது என மனம் வருந்தி பேசியிருக்கிறார் நடிகை காயத்ரி ரேமா.
சினிமா என்றாலே பலறது வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதில் நன்றாக வாழ்ந்து சரிந்தவர்களும் உண்டு, சரிவில் இருந்து உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால் எல்லா துறைகளிலும் மாறாமல் கேட்கப்படும் ஒரே வார்த்தை "அட்ஜெஸ்ட்மென்ட்". இந்த ஒரு வார்த்தை பலரது திறமையை கட்டி போட்டுள்ளது. உதாரணமாக பிக்பாஸ் 7-ல் கலந்து கொண்ட நடிகை சுசித்ரா, அந்நிகழ்ச்சியில் தன் சினிமா வாழ்க்கை அழிந்தமைக்கு காரணம் பெரிய ஹீரோவுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் ஆகாததால் என கூறி அழுதார். இப்படி இன்னும் எத்தனை நடந்திருக்கிறது என யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ், ஹரஹர மஹாதேவ, கிமோகினி, பேய் இருக்க பயமேன் ஆகிய திரைப்படத்தில் நடித்த நடிகை காயத்திரி ரேமா, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை நடிகர்கள் முதலாளி முதலாளி என்று தான் அழைப்பார்கள். ஆனால் இப்பொழுது மதிப்பதில்லை, மரியாதையும் கொடுப்பதில்லை என்றும் இது முதல் படம் என்பதால், ஹீரோயின் ஆடியோ லான்ச்சுக்கு வந்து இருக்காங்க, அடுத்தடுத்து பெரிய படங்கள் வந்தால் எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பராசக்தி ஹீரோ... அப்ப சிவாஜி இப்ப சிவகார்த்திகேயன்! பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்..!
அப்பொழுது தான் நான் யோசித்தேன் ஒருவேளை அப்பொழுது இருந்த தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹீரோயின்கள் திறமையை பார்த்து, நடிப்புக்கு உண்டான ஊதியத்தை கொடுத்து இருப்பார்கள் போல அதனால் தான் மரியாதையில் முதலாளி என்று சொல்லுகிறார்கள், அனால் இப்பொழுது திறமையை பார்க்காத பல அப்பா வயதுடைய தயாரிப்பாளர்கள் முதலில் கேட்கும் ஒரே வார்த்தை அட்ஜெஸ்ட்மென்ட் தான், இப்படி இருக்க எப்படி மரியாதை கொடுக்க தோன்றும்.
ஒரு நாள் பெரிய ஹீரோ ஒருவரிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், முதலில் சரி என்று சொன்னவர் மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்து ஏற்காட்டுக்கு வர சொன்னார். இதனை சற்றும் எதிர்பாராத நான் கோபத்தில் உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். ஆனாலும் சினிமாவில் சில நல்ல உள்ளங்கள் இருக்கும் பட்சத்தில் இப்படியும் பல அட்ஜெஸ்ட்மென்ட் சந்தர்ப்பவாதிகளின் சூழ்ச்சியில் சிக்கி அழிக்கின்றனர் அநேகர்.
இத்தனை ஆண்டுகளாக நான் நடித்துக் கொண்டு இருந்தாலும் பிரகாசிக்க முடியாததற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் தான். திறமையால் எனக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ அதுபோன்ற படத்தில் நடித்தால் போதும். இப்படி பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் கலாச்சாரம் மாறவேண்டும் என்று நினைத்தால் அப்படி கேட்கும் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோக்களின் பெயர்களை மக்களிடம் சொல்லுங்கள் அப்பொழுது தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது என்று கூறினார். சினிமா மட்டும் அல்லாது இன்று வேலைக்கு செல்லும் பல பெண்களுக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இது போன்ற அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் நடந்து தான் வருகிறது என்ற காயத்ரி ரேமாவின் பேச்சுக்கு பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 100வது நாள் திருமண கொண்டாட்டம்... வசைப்பாடியவர்களையும் வியக்க வைத்த நெப்போலியனின் செயல்..!