×
 

காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன் கணவருடன் நியூயார்க்கில் அடித்த லூட்டிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

காதல் கண் கட்டுதே என்பதை போல, தன் காதல் கணவருடன் கண்களில் பார்க்கும் இடங்களை எல்லாம் ரசித்து கொண்டு இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். என்னதான் நடிகை என்றாலும் அவரும் பெண் தானே. அந்த வகையில் ரகுலுக்கும் அச்சம், மடம், நாணம், எல்லாம் இருக்கும் அல்லவா.. அப்படி அனைத்தையும் ஒரே வீடியோவில் வெளிக்காட்டி இருக்கிறார். வீடியோ சிறியதாக இருந்தாலும் அதில் உள்ள நினைவுகளும் பயணங்களும் மிகவும் பெரியதாக உள்ளது. 

இப்படி இருக்க, பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டப்படிப்பை முடித்தார். பின் வடிவழகியாக அவதாரம் எடுத்து அதன் பின் சினிமாவில் நடிக்க வந்தார். இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், தற்பொழுது சுதந்திர பறவையாக நியூயார்க் சிட்டிக்குள் தனது ஜோடியுடன் பறந்து இருக்கிறார்.  

இதையும் படிங்க: நடிகை சமந்தாவின் புதிய காதலர் பாலிவுட் டைரக்டரா..? வதந்திகளை தூண்டும் வைரல் புகைப்படங்கள்..!

ரகுல் பிரித் சிங் திருமணத்திற்கு பிறகு தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை எங்கும் தனியாக விடுவதில்லை. எந்த புகைப்படங்களை எடுத்தாலும் கைகளை கோர்த்து கொண்டும், கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும், நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக இருக்கின்றனர்.இப்படி இவர்கள் பதிவிடும் புகைப்படங்களை காணும் நெட்டிசன்கள் வாழ்க்கை வாழ்ந்தால் இவர்களை போல தான் வாழ வேண்டும் என்னும் அளவிற்கு புகைச்சலை தூண்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை புகைப்படங்களை பதிவிட்டு பலருக்கு புகைச்சலை ஏற்படுத்திய சிங், தற்பொழுது வீடியோக்களை பகிர்ந்து பூகம்பத்தையே கிளப்பி இருக்கிறார். அதில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவும் தனது மேனியை சூரியனிடம் இருந்து காப்பாற்றவும் குடும்பத்துடன் நியூயார்க்கில் உள்ள தனி தீவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். தீவுக்குள் அடியெடுத்து வைக்கும் ரகுல்-ஜாக்கியை மேல தாளங்களுடன் அங்குள்ளவர்கள் வரவேற்பதும், இனிப்புகளை கொடுப்பதும், ரகுல் ரசித்து ருசித்து உணவு சாப்பிடுவதும், பின் தனது ஆசை கணவருடன் "தீ ஓஷன்" என கத்தியபடி படகு சவாரி செய்வதும், மெய் சிலிர்க்கும் இரவில் தனது கணவருடன் இறுக்கி அனைத்து புகைப்படங்கள் எடுத்தும், நடு கடலில் மீன்களை பிடித்தும், கடைசியாக நீச்சல் உடையில் கடலில் குளித்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தனது கணவருடன் ரொமான்டிக் வைப் செய்து இருக்கிறார். 

இவர் நடித்த பல படங்களில் கார்த்தியுடன் நடித்த திரன் மற்றும் தேவ் போன்ற படங்களில் "சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமையாகவா" என்ற பாடலில் காதலையும், வெட்கத்தையும், தனது ஜோடியுடன் அழகாக காண்பித்து இருப்பார். இதனை பார்த்த பலரும் படத்தில் இப்படி இருப்பவர்கள் நிஜ வாழ்வில் இப்படி இருக்க மாட்டார்கள் என கூறிவந்தனர். அப்படி கூறியவர்கள் வாய்களை தற்பொழுது அடைக்கும் வகையில்  இருவரின் ஜோடி பொருத்தம் அமைந்துள்ளது. ரகுல் சிங்கின் பதிவுகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் வாழ்ந்தால் ஜாக்கி போல் தான் வாழனும், எங்கள் கண்களை உங்களிடத்தில் கொடுத்து உள்ளோம் அதனை சிரிப்புடன் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என தங்களது மன வேதனையை குமுறி வருகின்றனர். 

மேலும், ரகுலின் வீடியோவை பார்த்த இல்லத்தரசிகள், தங்கள் கணவர்களிடம் ரகுல்-ஜாக்கி போல நாமும் சிறந்த ஜோடியாக இருக்க வேண்டுமானால் நியூயார்க் சென்று வைப் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இல்லத்தரசிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் குடுப்பஸ்தன்கள் ஒரே பதிவில் சோலியை முடிச்சிட்டிங்களே ரகுல் பிரித் சிங் என குமுறி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களை வறுத்தெடுக்கும் நடிகைகள்... ஜோதிகாவை தொடர்ந்து ரம்யாவும் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share