அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கையலிருந்து தப்புவாரா?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆம் ஆத்மி கட்சி.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனமும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதுடெல்லி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தீப் தீக்சித் ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியி்ட்டு வென்றுள்ளார். 2015ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் நுபுர் ஷர்மாவைவிட 35 சதவீத வாக்குகள் பெற்று கெஜ்ரிவால் வெற்றி பெற்றார், 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் சுனில் குமார் யாதவைவிட 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் வென்றார். அதே நம்பிக்கையில் புது டெல்லி தொகுதியில் 3வது முறையாக கெஜ்ரிவால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் முடிந்தபின் ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் “ டெல்லியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நிலுவையில் உள்ளன. நான் மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளேன், டெல்லி மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன், ஒரு புறம் எங்கள் கட்சி மக்கள் பணியாற்றுகிறது, மற்றொருபுறம் தூற்றப்படுகிறது,ஆதலால் வாக்களியுங்கள் நல்ல கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், சாலை வசதிகளுக்காக வாக்களியுங்கள். ஏராளமான பணிகள் எனக்கு காத்திருக்கின்றன. கடின உழைப்புக்கு டெல்லிமக்கள் நிச்சயமாக மதிப்பளித்து வாக்களிப்பார்கள். பாஜகவுக்கு முதல்வர் வேட்பாளரும் இல்லை, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் இல்லை” எனத் தெரிவித்தார்
ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் கூறுகையில் “ இந்த டெல்லி தொகுதி ஒரு பொருட்டல்ல, ஆனால், மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்ல பணிகள், வளர்ச்சித்திட்டங்கள் நின்றுவிடும், நிறுத்தப்படும் என்பது மக்களுக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது, வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. 70 தொகுதிகளுக்கும் ஆளம் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது, பாஜக 59 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரு கட்சிகளும் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், டெல்லி தேர்தலில் இரு கட்சிகளும் எதிரும்புதிருமாக போட்டியிடுகின்றன. வரும் 17ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும், 18ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 20ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசிநாளாகும்.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதேசமயம், 2020ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 62 தொகுதிளில் வென்றது, பாஜக 8 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம்... ஆம் ஆத்மி-யின் அதிஷி வேட்புமனு தாக்கல்...