அடுத்த ஜென்மத்தில் பழிவாங்க வந்த நீலாம்பரி..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் செல்பி எடுத்த ரம்யா கிருஷ்ணன்..!
படையப்பா படத்தில் அடுத்த ஜென்மத்தில் பழிவாங்குவேன் என்றவர் தற்பொழுது ஜெயிலர் 2வில் வந்து மிரட்டுகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வெளியான அட்டகாசமான திரைப்படம்தான் படையப்பா.
கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது பேராதரவை கொடுத்தார்கள். இப்போது கூட அந்தப் படத்தை டவுன்லோட் செய்தோ இல்லை டிவியில் போடும்போதோ தவறாமல் பார்க்கும் ரசிகர்கள் இங்கு உண்டு.
மேலும், படையப்பா படத்தில் நிறைய சிக்கல்கள் வந்தது. குறிப்பாக படையப்பா முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினி, படத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், எப்படியாவது இந்த ஐடியாவிலிருந்து ரஜினியை பின்வாங்க வைக்க வேண்டும் என முடிவெடுத்து நேராக கமல் ஹாசனிடம் உதவி கோரியுள்ளார். உடனடியாக இந்த விபரீத ஐடியா எல்லாம் எப்போதும் ஒத்து வராது என்று ரஜினியிடம் பேசிய கமல். இந்த பிரச்சனையை ரவிக்குமாரிடம் விட்டுவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார் என்று கூறவிட்டு சென்றாராம்.
இதையும் படிங்க: நெல்சன் படத்தில் இணையும் பான் இந்தியா ஸ்டார்..! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!
இந்த படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தை தாங்கி நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் நீலாம்பரியாக ரஜினிக்கே டஃப் கொடுத்து இருப்பார். "மின்சார கண்ணா... வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகல" என்பதும் "இந்த நீலாம்பரி ஆசைப்பட்டத அடையாம விடமாட்டா..." போன்ற டயலாக்குகள் அவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது. மேலும், இவருக்கு புரிய வைக்கும் விதத்தில் நடிகர் ரஜினிகாந்த் "அதிகமா ஆசைப்படுகிற ஆம்புளையும் அளவுக்கு அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை " என்று சொல்லும் டயலாக்குகள் இன்றும் பலரது வாயில் ஒலித்து வருகிறது.
இப்படிப்பட்ட, நீலாம்பரி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது மீனாதான். ஆனால் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதை கணித்த ரவிக்குமார் பின் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் தற்பொழுது கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் தொடக்கம் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஒரே வார்த்தையில் பறிபோன ஆர்எம் வீரப்பன் பதவி"..! ஜெயலலிதாவை எதிர்த்த காரணத்தை அப்பட்டமாக உடைந்தார் - ரஜினிகாந்த்..!