×
 

கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ரா ஜனனி... இந்த சிரிப்புக்கு விலையே இல்லை.. பாராட்டும் ரசிகர்கள்..!

புதுவிதமான சேலையில் தனது அழகை வெளிப்படுத்தி இருக்கும் பவித்ரா ஜனனி.

பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியில், "ஈரமான ரோஜா" என்ற தொடரில் மலர் கதாபாத்திரத்திலும், "தென்றல் வந்து என்னை தொடும்" தொடரில் அபிநயா கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம், பவித்ரா ஜனனி தன்னை சின்னத்திரை வட்டாரத்தில் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொண்டார். இப்படி கதாநாயகியாக இப்பொழுது பவித்ராவை பலருக்கு தெரிந்தாலும், ஆரம்பத்தில் "ஆபிஸ்" மற்றும் "சரவணன் மீனாட்சி" போன்ற தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 

மேலும், ஈரமான ரோஜா சீரியலில், இறந்த தனது காதலனின் சகோதரனை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட பெண்ணாக நடித்தார், இதில் தனது நடிப்பை அழகாக வெளிப்பத்தியதால் மலர் என்ற கதாபாத்திரத்தை மக்கள் விரும்ப ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து, ​​"தென்றல் வந்து என்னை தொடும்" தொடரில் சவாலான திருமணத்தின் சிக்கல்களைக் கடந்து தன் வாழ்க்கையை எப்படி கடந்து செல்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருக்கும்.

இதையும் படிங்க: 46 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! வளைகாப்பு புகைப்படங்கள்!

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் என்றால் நடிகை பவித்ரா ஜனனி தான். இப்படி இருக்க அங்கு முத்து முதலானோர் முதல் தனது விளையாட்டை தனித்துவமாக்கி, போட்டிகள் பொறாமைகள் மத்தியில் தனது அன்பையும் வெகுளித்தனத்தையும் காண்பித்து தனக்கென ரசிகர்களை உண்டாக்கி, இன்று சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் 8 முடிந்தாலும் பவித்ராவின் நகைச்சுவைகளை இணையத்தில் பார்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். 

இந்த வரிசையில் தினமும் தனது இன்ஸ்ட்டாகிராம் பகுதியில் ஆக்ட்டிவாக இருக்கும் பவித்ரா தினமும் ஒரு பதிவையாவது பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார். அதே போல் இன்று தனது இன்ஸ்ட்டா தளத்தில் கட்டிய சேலையின் மடிப்பு கலையாமல் தனது பொன் சிரிப்பால் ஒட்டு மொத்த அழகையும் முகத்தில் பொலிவுடன் காண்பித்து தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 

இதனை பார்த்த பவித்ராவின் ரசிகர்கள் "கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ராவின் புகைப்படத்தை கண்டு நாங்கள் உறைந்து போனோம்" என பதிவிட்டு வருகின்றனர்.  


 

இதையும் படிங்க: ஹீரோவாக அவதாரம் எடுக்கும் மாதம்பட்டி.. சமையலில் கலக்கியவர் மீண்டும் சினிமாவில் கலக்க வருகிறார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share