ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!
நடிகை பூர்ணிமாவின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதில் ஒருவருடைய வாழ்க்கை உச்சபட்ச நட்சத்திரமாக மாற்றி உள்ளது என்றால் அது நடிகை பூர்ணிமா தான். தமிழ் திரையுலகம் பலரை வெற்றியாளனாக மாற்றி உள்ளது. அதேபோல் பலரை தோல்வியாளராக மாற்றி பைத்தியம் பிடிக்க வைத்து அலைய விட்டுள்ளது. இந்த சினிமா உலகில் வெற்றியடைபவர்கள் பல வருடங்களாக அதற்குண்டான உழைப்பை போட்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி என்ற ஒன்று அவர்களை வந்து சேரும்.
இப்படி இருக்க, திறமையானவர்களை தேடி செல்லும் காலம் மாறி, இணையத்தில் ரீல்ஸ் எப்பொழுது வந்ததோ, அன்றிலிருந்து திறமைகளை கண்டு கொள்வது எளிதாக மாறி உள்ளது. ரீல்ஸ் போடுபவர்கள் அதன் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்தி பல இயக்குனர்களைக் கவர்ந்து தற்பொழுது திரையுலக நட்சத்திரங்களாக மாறி உள்ளனர்.
இதையும் படிங்க: இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்..! இணையத்தில் வைரல்..!
அந்த வரிசையில், ஆரம்ப காலத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்த நடிகை பூர்ணிமா, தனது வேலையை ராஜினாமா செய்து, தங்க இடமில்லாமல், வழி செலவுக்கு பணமில்லாமல் சென்னையில் சுற்றித்திரிந்த காலத்தில் பூர்ணிமாவுக்கு கை கொடுத்தது அவருடைய ஆண் நண்பர்கள் தான். பூர்ணிமாவுக்கு தங்க இடமும் கொடுத்து, பாதுகாப்பும் கொடுத்த தனது நண்பர்களை கௌரவிக்கும் விதமாக யூடியூப் சேனல்களை ஆரம்பித்து தனது நண்பர்களுடன், தான் இருந்த அனுபவங்களை காட்சிகளாக மாற்றி, உலக மனிதர்களின் மத்தியில் ஆண் பெண் இருவரும் நண்பர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காண்பித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாகினார்.
இப்படி யூடியூபில் மட்டுமே கலக்கி வந்த பூர்ணிமாவை கண்டெடுத்த பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று அவர்கள் நடத்தும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராக அனுப்ப, அங்கு சென்ற பூர்ணிமா மாயாவுடன் கூட்டணி அமைத்து தன்னுடன் பங்குபெற்ற சக போட்டியாளர்களை துவம்சம் செய்தார். இதனால் அவர்களுக்கு மேலும் ரசிகர்கள் உண்டாக்கினர்.
இதனை அடுத்து பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பூர்ணிமாவுக்கு பல பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. பல இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படத்தில் பிசியாக இருக்கும் பூர்ணிமா, அவ்வப்போது தன் பொன் சிரிப்பாலும், கவர்ச்சி உடையாலும், விதவிதமான போஸ்களில் போட்டோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வர, அதனை ரசிகர்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
பூர்ணிமா வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கண்டிப்பாக ஒரு படமாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!