×
 

படர்ந்திருக்கும் பனிக்கு நடுவே... செக்க சிவந்த ஸ்ட்ராபெர்ரி பழம் போல் போஸ் கொடுத்த துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா விஜயன் தற்போது சுசர்லாந்து சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில வருடங்களாக, தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பலர் அடுத்தடுத்து, திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வங்கியில், திண்டுக்கல் மண்ணில் பிறந்து இன்று முன்னணி ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் துஷாரா விஜயன்.
 

மாடலிங் துறையில் நுழைந்து, பின்னர் ஹீரோயினாக மாறிய துஷாரா நடிக்க வாய்ப்பு தேடியபோது ஒரு சிலர் இவரது தோற்றத்தை பார்த்து உனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என விமர்சனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஹீரோயினுடன் சேர்ந்து பீடி பிடிக்கும் சசிகுமார்.. வெளியானது மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஆனால் தன்னை சுற்றிய விமர்சனங்களை கடந்து, 2019-ஆம் ஆண்டு 'போதை ஏறி புத்தி மாறி' என்கிற படத்தில் துஷாராவுக்கு  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் துஷாராவுக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மா கதாபாத்திரம் தான். துஷாராவின் எதார்த்தமான நடிப்பு, ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தது. அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தது.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது', அருள்நிதி ஜோடியாக 'கழுவேத்தி மூர்க்கன்', அர்ஜுன் தாஸ்க்கு 'அநீதி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த, ராயன் படத்திலும் நடித்திருந்தார். 

தற்போது இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், இந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள வீர தீர சூரன் பார்ட் 2 படத்திலும் நடித்துள்ளார். 

முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்துள்ள துஷாரா தன்னுடைய விடுமுறையை கொண்டாடுவதற்காக தற்போது சுசர்லாந்து சென்றுள்ளார். அங்கிருந்தபடி, ஸ்டாபெர்ரி பழம்போல் சிவப்பு நிற மாடர்ன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசர வைத்துள்ளார். அந்த போட்டோஸ் இப்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கணவருடன் ஒரே கிளுகிளுப்பு தான்.. கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share