×
 

மகேஷ், மாயாவுக்கு வரும் சந்தேகம்.. சாமுண்டீஸ்வரியின் கணக்கு என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மகேஷின் மாப்பிள்ளை தோழனாக கார்த்தி இருப்பான் என்று சாமுண்டீஸ்வரி சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ரேவதியுடன் தோழி பெண்ணாக ரோஹிணியை உட்கார வைக்க சொல்ல சாமுண்டீஸ்வரி ரோகினி வேண்டாம் என்று சொல்கிறாள். 

ஏன் ரோகினி வேண்டாம் என்று கேட்க அவளுக்கு குழந்தை இல்லை என்பதால் வேண்டாம் என்று சொல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.. என்று சொல்கின்றனர். 

இதையும் படிங்க: சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கல்யாணத்தில் காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !

ரோகிணியும் வேண்டாம் என்று சொல்ல ரேவதி நீ வரலைனா நான் காரை விட்டு இறங்கிடுவேன் என்று சொல்ல ரோகினி தோழி பெண்ணாக செல்கிறாள். 

அடுத்ததாக மண்டபத்திற்கு வந்ததும் ஆரத்தி எடுக்க சொல்லி ஒரு பெண்மணி சொல்ல மகேஷ், ரேவதி ஒன்றாக நிற்கும் போது மயில்வாகனம் மகேஷை பிடித்து லைட்டாக தன் பக்கம் இழுக்க கார்த்திக் மற்றும் ரேவதிக்கு ஆரத்தி எடுப்பது போல் மாறுகிறது. 

இதனால் மாயா, மகேஷ், சந்திரகலாவுக்கு சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படிங்க: மகேஷ், மாயா உறவை அம்பலப்படுத்த கார்த்திக் போடும் திட்டம்? நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share