Karthigai Deepam: மாயா சதியால் - சிக்கலில் ரேவதி! கண்டுபிடிப்பான கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கும் என்பதை பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் ரேவதியை பிரிக்க திட்டம் போடும் மாயா, ஏற்காட்டிற்கு வந்து இறங்குகிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ரூமுக்குள் நுழைய ரூம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க ரேவதி கடுப்பாகிறாள், கார்த்திக்கும் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என சொல்லியும் நம்ப மறுக்கிறாள்.
அதன் பிறகு கார்த்திக் வெளியே சென்றிருக்க அப்போது மாயா ஏற்பாடு செய்த சர்வெண்ட் உள்ளே வந்து பொக்கேவை கொடுத்து உங்க ஹஸ்பண்ட் கொடுக்க சொன்னதாக சொல்ல ரேவதி இன்னும் கடுப்பாகிறாள்.
பிறகு கார்த்திக் வந்ததும் அவனிடம் கோப்பட கார்த்திக் சர்வெண்ட்டை கூப்பிட்டு விசாரிக்க மாற்றி கொடுத்து விட்டதாக சொல்கிறான். அடுத்து ரேவதி கோபித்து கொண்டு தனியாக வெளியே சென்று ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறாள், சாப்பிட்டு முடித்த பிறகு பர்ஸில் பணம் இல்லை என தெரிய வருகிறது. இதனால் கடை ஓனர் பாத்திரம் கழுவ சொல்ல ரேவதி செய்வதறியாது நிற்கிறாள்.
இதையும் படிங்க: சந்திரகலாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்தி? ஹனி மூன் செல்லும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரியால் கடுப்பாகும் ரேவதி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!