ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?
இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் (₹) சின்னத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ என்ற எழுத்தை அச்சுப்பதித்திருப்பது தேசிய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் தேவநாகரி எழுத்தை நீக்கிவிட்டு தமிழக பட்ஜெட்டில் ரூ என்ற எழுத்தை தமிழக அரசு வைத்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் சின்னத்தை உருவாக்கியது ஒரு தமிழர் அதுவும் திமுக எம்எல்ஏவின் மகன் என்பது பெரும்பாலும் தெரியவாய்ப்பில்லை.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் ரூபாய் சின்னத்தை, தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வடிவமைத்து உருவாக்கினார். இவர் திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார். மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற உதயகுமார் கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்ஷன் என்ன?
ரூபாய் (₹) சின்னம் எப்படி வந்தது?
2010ம் ஆண்டுக்கு முன்புவரை இந்திய ரூபாயை “RS” அல்லது “INR” என்ற எழுத்துக்களால் தான் சர்வதேச சந்தையில் குறிக்கப்பட்டது. பாகிஸ்தான், இலங்கை கரன்சிகளுக்கும் இதேபோன்ற எழுத்துக்கள் இருந்ததால் குழப்பமும் இருந்தது. இதையடுத்து, 2009ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தி, இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைக்கக் கூறியது. இதற்காக வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களின் கற்பனையை வரைந்து அனுப்பலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இந்தியப் பொருளாதாரம், கலாச்சாரத்தை தாங்கி இந்த சின்னம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைக்கும் போட்டியில் ஐஐடி மும்பையில் படித்து, கவுகாத்தி ஐஐடியில் டிசைன் துறையில் சேர்ந்திருந்த திமுக எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் உருவாக்கிய சின்னம் முதல் பரிசைப் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில் தமிழர் ஒருவர் உருவாக்கிய சின்னம்தான் தற்போது இந்திய ரூபாயின் சின்னமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தை உருவாக்க உதயகுமார் நீண்ட நேரம் ஆராய்ச்சி, வரலாற்றில் இருந்து நவீன காலம் வரை ஆய்வுகள் ஆகியவற்றை செய்து, இந்த சின்னத்தை நவீன தொழில்நுட்பங்களை வைத்து உருவாக்கினார். தேவநாகரி எழுத்தில் உருவாக்கிய இந்த ரூபாய் சின்னம் இந்தியாவின் கலாச்சாரம், வரலாற்றை தெரிவிக்கும் சிறந்த சின்னமாக இருக்கும் என உதயகுமார் நம்பினார். அதற்கு ஏற்றார்போல் இந்த சின்னமும் முதல் பரிசைப் பெற்றது.
தேவநாகரி எழுத்தான “ரா(Ra)” என்பது ரூபியா என்பதையும், ஆங்கிலத்தில் ஆர் எழுத்தையும் சேர்த்து (₹) இந்த சின்னத்தை உதயகுமார் உருவாக்கினார். 2010ம் ஆண்டு இந்த போட்டியில் உதயகுமார் வென்றபின் அவரின் வாழ்க்கையிலும், கல்வியிலும், துறையிலும் புதிய வாய்ப்புகளைப் பெற்றார்.
இதன்பின் ஹைதராபாத் ஐஐடி, நீ்ட் தேர்வு நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஆகியவற்றுக்கும் உதயகுமார் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தார். கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் உதயகுமார், டிசைன் துறைியல் சாதிக்க மாணவர்கள தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
2010, ஜூலை 15ம் தேதி இந்திய ரூபாய்க்கு புதிய (₹) சின்னத்தை அப்போது ஆட்சியி்ல் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த (₹) சின்னத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்தார்.
ரூபாய் சின்னத்தோடு சண்டையிடும் திமுக அரசு, (₹) சின்னத்தை உருவாக்கியதே திமுக எம்எல்ஏவின் மகன், அதிலும் ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!