×
 

எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த தலைவலி... அதிமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு...!

அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் வீட்டின் முன்பு ரகலையில் ஈடுபட்ட அதிமுக ஒன்றிய கழக செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் வீட்டின் முன்பு ரகலையில் ஈடுபட்ட அதிமுக ஒன்றிய கழக செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு மாவட்ட செயலாளராக திருக்கழுக்குன்றம்  எஸ்.ஆறுமுகம் அவர்கள் மாவட்ட செயலாளராக உள்ளார் இவர் சில தினங்களுக்கு முன்பு இவரது முகநூலில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், செய்யூர் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி வாகை சூட வேண்டும்

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவதே எனது  லட்சியம் 
 ஒன்று கூடுவோம். வெற்றி பெறுவோம் நாளை நமதே என்று தனது கருத்துக்களை முகநூலில் பதிவு செய்திருந்தார்

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் முடக்கமா.? ஈபிஎஸ் தரப்புக்கு பிரஷரை எகிற வைக்கும் பெங்களூரு புகழேந்தி.!


இதையடுத்து அந்த  முகநூல் பக்கத்தில் அச்சிறுப்பாக்கம் அதிமுக  அம்மா பேரவை  நகர செயலாளராக பொறுப்பில் இருந்து வரும் முகமது இத்ரீஸ் என்பவர் முதலில் அச்சிறுப்பாக்கத்தை சரி பண்ணுங்க தலைவா என நக்கலாக தனது கருத்தை கமெண்டில் பதிவு செய்திருந்தார்


 இதையடுத்து அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் வீட்டின் முன்பு இன்று அச்சிறுபாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட குண்டர்களுடன்  சென்று வீட்டில் இருந்த பெண்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் செய்துள்ளார்...


இந்த நிலையில் அதிமுகவின் அம்மா பேரவை நகர செயலாளர்  முகமது இத்ரீஸ் என்பவர் இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் 
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக நிர்வாகி பதிவு செய்திருந்த கருத்தில் இன்னொருவர் கிண்டலாக பதில் அளித்ததால் ஏற்பட்ட விவகாரத்தில் அதிமுக நிர்வாகி மீது அதிமுக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: செங்கோட்டையனுக்குத் தெரியாமல் எடப்பாடியார் செய்த ஒரே ஒரு காரியம்... ஒட்டுமொத்த அப்செட்டுக்கும் காரணம் இதுவா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share