×
 

கேரளாவை ஆட்டிப்படைக்கும் சிக்கல்! ஜப்பான், தென் கொரியா போல் கவலைப்படும் விஷயம் தெரியுமா?

தென் கொரியா, ஜப்பான், பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைந்து, குழந்தைப் பிறப்பு குறைந்து வரும் சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகின்றன.

ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றிலும் மக்களை குழந்தை பெற்றுக் கொள்ளக் கோரி அந்தந்த அரசுகளே ஊக்கப்படுத்தி வருகின்றன. அதேபோன்ற சிக்கலை தற்போது இந்தியாவில் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாநிலமும் எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஐரோப்பா
இந்தியாவில் சில வளர்ந்த மாநிலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளுதலை தள்ளிப்போடுதல், குழந்தை பிறப்பின்மை, ஆர்வமின்மை சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தை “ இந்தியாவின் ஐரோப்பியா” என்று அழைப்பதுண்டு, இந்த மாநிலத்தில் மக்களுக்கு சிறந்த சுகாதாரம், கல்வி வசதிகள், வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்து வருகிறது.
வளர்ந்துவிட்ட மாநிலமாக மாறிவிட்டநிலையில் கேரள மக்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாமலும், தள்ளிப்போடுதலை செய்வதால், மாநிலத்தில் குழந்தை பிறப்பின்மை சதவீதம் குறைந்துள்ளது.

குறையும் மக்கள் தொகை...
கேரள மாநிலத்தில் 2024ம் ஆண்டில் 3.6 கோடி மக்கள் வாழ்வதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் மக்கள் தொகை 2.90 கோடியாக இருந்த நிலையில், கடந்த 35 ஆண்டுகளில் மக்கள் தொகை அளவு 70 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேரள மக்கள் தொகை 3.30 கோடியாக இருந்தாலும், கடந்த 13 ஆண்டுகளில் 30 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் நிலையான மக்கள் தொகை வளர்ச்சியை அடைந்துவிட்டாலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான்.

இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..!

குழந்தை பிறப்பு 
சமீபத்தில் “தி இந்து” ஆங்கிலம் நாளேடு கேரள மக்கள்தொகை வளர்ச்சி குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா பெருந்தொற்றுக்குப்பின், கேரள மாநிலத்தில் குழந்தை பிறப்புவிகிதம் கவலைக்குரியதாக மாறியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் முதல் 5.50 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2023ம் ஆண்டில் 3.93 லட்சம் குழந்தைகள்தான் பிறந்துள்ளனர். முதல் முறையாக மாநிலத்தில் ஆண்டு குழந்தை பிறப்பு 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 2021ம் ஆண்டு கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில்கூட குழந்தை பிறப்பு 4.19 லட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2020-21  ஆண்டைத் தவிர கேரள மாநிலத்தில் மகப்பேறின்போது தாயும் சேயும் இறத்தல், தாய் இறத்தல் போன்றவை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் கருவுறுதல் குறைவு, மற்றும் மாறிவரும் மக்கள்தொகை நிலை ஆகியவை, மாநில சமூக கட்டமைப்பில் மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன கேரளாவில், குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் பல கொள்கை அளவிலான விவாதங்களின் மையமாக உள்ளன என்றும் பலர் அஞ்சுகின்றனர். 1980ம் ஆண்டுகளில் இருந்து கேரள மாநிலத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 5.50 லட்சம் குழந்தைகள் பிறந்தநிலைில் 2016ம் ஆண்டில் முதல்முறையாக மாநில வரலாற்றிலேயே ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 4.96 லட்சமாகக் குறைந்தது.

மகப்பேறு நிலை
2018ம் ஆண்டிலிருந்து குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது, 5 லட்சத்துக்கும் மேல் கடக்கவே இல்லை. 2021ம் ஆண்டில் அதிபட்சமாக 4.19 லட்சம் குழந்தைகள் பிறந்திருந்தன என்று அரசு தெரிவித்துள்ளது. மாதிரி பதிவு முறை(எஸ்ஆர்எஸ்) அறிக்கையின்படி, இந்தியாவில் மகப்பேற்றின்போது தாய்மார்கள் இறப்பு என்பது கேரளாவில் 29 ஆக இருக்கிறது. இதை 2030ம் ஆண்டுக்குள் 20ஆகக் குறைக்க அரசு முயன்று வருகிறது. மகப்பேறுதுறையின் மூத்த மருத்துவர் வி.பி.  பைலி கூறுகையில் “ 2030ம் ஆண்டுக்குள் மகப்பேறு இறப்பு விகிதத்தை 20ஆகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுபோல் நடப்பது கடினம், ஏனென்றால், குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது. 2024-25ம் ஆண்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 32 ஆக ஏற்கெனவே அதிகரித்துவிட்டது. மகப்பேற்றில் இறப்பு விகிதத்தை 20 ஆகக் குறைப்பது என்பது கடினமான ஒன்றாகும்.

மகப்பேறின்போது தாய்மார்கள் இறப்பைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவச் சிகிச்சைகளை செய்து வருகிறோம், ஆனால், சில விஷயங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. குறைந்த பிறப்புவிகிதம், குடியேற்றம், சமூகத்தின் மீதான கண்ணோட்டம், திருமணம், குழந்தை பிறப்பு திட்டம் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
இடப்பெயர்தல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின்(ஐஐஎம்ஏடி) தலைவர் இருதய ராஜன் கூறுகையில் “ கேரள மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை பிறப்புவிகிதம் குறைந்து வருகிறது, ஒருமுறை குழந்தை பிறப்பு குறைந்துவிட்டால் தொடர்ந்து வரைபடத்தில் விகிதம் சரியத்தொடங்கும், மீண்டும் ஏற்றத்துக்கு கொண்டுவருவது சிரமம்” எனத் தெரிவித்தார்
மக்கள் தொகை அறிவியல்வல்லுநர்கள் கருத்துப்படி, “ ஒரு பெண் குறைந்தபட்சம் சராசரியாக 2 குழந்தைகள் பெற்றுக்கொள்வது அவசியம், அப்போதுதான் மக்கள் தொகையை பராமரிக்க முடியும். கேரள மாநிலம் இந்த நிலையை 1987-88ம் ஆண்டில் எட்டிவிட்டது. கேரளாவில் 100 சதவீத குழந்தை பிறப்புகள் மருத்துவமனையில்தான் நடக்கின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக சுகாதார முறை இருப்பதால், குழந்தை இறப்பு விகிதம் குறைந்துவிட்டது.

ஆயிரம் குழந்தைகளுக்கு 6 குழந்தைகள் என்ற ரீதியில் இறப்பு குறைந்துவிட்டது.இது தேசிய சராசரியான 30 என்ற எண்ணிக்கையைவிட குறைவுதான். ஆனால், பல வல்லுநர்கள் கூற்றுப்படி, கேரளாவில் மக்கள் தொகை வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டது, ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருவதுதான் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் 1987-88ல் பிறப்புவிகிதம் 2.1 சதவீதமாக இருந்தது, இது தொடர்ந்து நிலையாக இருந்துவந்தால் பிரச்சினையில்லை.ஆனால் படிப்படியாக 1.8 முதல் 1.7 என 1991ம் ஆண்டு குறைந்தது. 2020ம் ஆண்டில் இது 1.50 என்று குறைந்து, 2021ம் ஆண்டில் 1.46 எனச் சரிந்து 2023ல் 1.35 ஆக வீழ்ச்சி அடைந்தது. அதாவது ஒரு பெண் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார், 2வது குழந்தை என்பது 35 சதவீத விருப்பமாக மாறிவிட்டது.இதை நிலை நீடித்தால் வரும் காலத்தில் கேரள மக்கள் தொகை மேலும் சரியும்

இதையும் படிங்க: 3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share