பப்லு பிரிந்தாலும் கடவுள் கொடுத்த வரம் சுமேஷ்..! லிவிங் To திருமணம்..! அசத்தும் ஷீத்தல்
சின்னத்திரை பிரபலமான பப்லுவின் முன்னாள் காதலியான சீத்தல், பப்லு வை பிரிந்து சுமேஷ் சோம சேகரன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரது கணவருடனான அவரது நினைவுகளை பகிர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று அனைவராலும் பப்லு என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் ப்ரித்விராஜ். தற்போது சீரியல்களில் நடித்து கலக்கும் இவர், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர் , சிவாஜி படங்களில் நடித்ததோடு அஜித் , சூர்யா ஆகியோரின் படங்களிலும் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்தவர்.
1994 ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும் உள்ளார், இந்த நிலையில், திடீரென ஷீத்தல் மேல் காதல் வயப்பட்ட பப்லு, தனது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டமாக எடுத்து செல்ல முடிவு எடுத்து, ஷீத்தலுடன் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திடீரென கடந்தாண்டு இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.
ஆனால் இது குறித்து பப்லு மவுனம் காத்தலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த ஷீத்தல் மறைமுகமாக தனது பிரிவுக்கான காரணத்தை உடைத்தார். அதில் அவர் கூறுகையில் , எனக்கும், பப்லுவுக்கும் மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருக்கிறது. எங்களுக்குள் நடந்த பல கசப்பான அனுபவங்களை மக்கள் மத்தியில் கூறி ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருத்தப்படுவதை நான் விரும்பவில்லை ,ஆதலால் நாங்கள் மறைமுகமாக பிரிந்து விட்டோம். ஆனால் அந்த வலி மிகவும் கொடுமை, நான் சகஜமாக இருக்கிறேன் என பொய் சொல்ல விரும்பவில்லை, அதற்காக எங்கள் பிரிவின் உண்மையை கூறினால், மக்கள் எங்கள் மீது வைத்த அபிப்ராயம் மறைந்துவிடும்.
இதையும் படிங்க: உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!
ஆனாலும் அனைவரும் கேட்டதற்க்காக மீண்டும் சேர நினைத்து நாங்கள் அனிமல் படத்தின் புரோமோஷனில் ஒன்றாக சேர்ந்து இருந்தோம். ஆனால் ஒருமாதம் கூட நிலைக்கவில்லை, ஆதலால் பிரிவின் வலியை மறக்க எழுதினேன். எழுதுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. எனக்கு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் நகர வழிவகை செய்தது. ஆதலால் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வர முடிவெடுத்தால் மீண்டும் அவர்களுடன் சேர நினைக்க வேண்டாம். ஏனெனில் நான் பப்லுவிடம் வாங்கிய மோதிரம் வரை திருப்பி கொடுத்து விட்டு தான் வந்தேன். அப்பொழுது தான் நிம்மதி கிடைத்தது.
எனவே இது நான் அனைவருக்கும் சொல்லும் ஒரு அட்வைஸ் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், பப்லுவை பிரிந்த ஷீத்தல், கடந்த ஆண்டு சுமேஷ் சோமசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த ஓராண்டு காலத்தில் தனது கணவருடன் ஷீத்தல் செய்த குறும்பு சேட்டைகளையும் , மகிழ்ச்சியாக இருந்த தருணங்களையும் மக்களுக்கு வெளிக்காட்டும் வகையில் காதலர் தினத்தன்று, தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இதனை பார்த்த ஷீத்தலின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து கூறி காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா... ஆதரவின்றி அரசு மருத்துவமனையில் அனுமதி....