×
 

சுந்தரிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

சுந்தரி சீரியலின் கதாநாயகியான கேப்ரில்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சின்னத்திரை பிரபலங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

சாதிக்க முகம் தேவையில்லை திறமை மட்டும் இருந்தால் போதும் என்று சினிமா துறையில் கால் பதித்து சாதித்தவர்கள் அநேகம். அவர்கள் வரிசையில் தன்னுடைய திறமையை முதலீட்டாக வைத்து இன்று தனக்கென ரசிகர்களை உருவாக்கி, சினிமா துறையில் தன் கால் தடத்தை பதித்தவர் தான்  கேப்ரில்லாசெல்லஸ்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத் மற்றும் தீனாவுடன்  சந்திரமுகி கதாபாத்திரம், பேய் பிடித்ததை போன்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை காண்பித்தார். அதன் பின் தனது சமூகவலையத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால் அவரது நடிப்பின் ஆர்வத்தை கண்ட இயக்குநர்கள், நயன்தாராவின் ஐரா, ரஜினியின் கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இதையும் படிங்க: 'தில்லுபாரு ஆஜா' பாடுறது STR ராஜா...! இன்னைக்கு கண்டிப்பா ட்ரீட் இருக்கு ...!

இதனை அடுத்து 2021ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி  கிராமங்கள், நகரங்கள் தோறும் உள்ள இல்லத்தரசிகளின் கனவு நாயகியாக மாறினார். இந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் கேபி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு தாயாக போவதால், அதற்குண்டான ஓய்வு  எடுக்க போவதாக கூறி தினமும் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவு செய்து வந்தார். 

இந்த நிலையில், கேப்ரில்லா தனது வளைகாப்பு நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த நிகழ்வுகளை வீடியோக்களாகவும்  புகைப்படங்களாகவும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கேப்ரில்லாவிற்கும் அவருக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் வாழ்த்து கூறி, இறைவனிடம் பிராத்தனை செய்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share