மாட்டிக்கின்னாரு ஒருத்தரு... ஜான் ஆரோக்கியசாமியுடன் சீமான் வைத்த கூட்டு... நாதகவுக்கு தவெக வைத்த குட்டு..!
விஜய் தேர்தல் வியூக வகுப்பாளரை பயன்படுத்துவது பணக்கொழுப்பு என சீமான் விமர்சித்திருந்த நிலையில்,2021ம் ஆண்டு தேர்தலின் போது வியூக வகுப்பாளரை பயன்படுத்தியதாக தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.
சமீப காலமாக வியூக வகுப்பாளர்கள் மூலம் தேர்தலை சந்திப்பது சமயோஜிதம் என்றே பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் அமைத்துக் கொடுத்த வியூகம் தான் வெற்றிக்கு வழிவகுத்தது என கூறப்பட்டது. தற்போது தவெகவின் சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஐக்கியமாக இருக்கிறார். ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி தவெக வியூக வகுப்பாளராக இருந்து வரும் நிலையில் வாய்ஸ் ஆப் காமர்ஸ் நிறுவனத்தின் ஆதவ் அர்ஜுனாவும் தவெகவில் இணைந்துள்ளார்.
பணக்கொழுப்பு சர்ச்சை:
இரு நாட்களுக்கு முன்பாக பிரசாந்த் கிஷோர் விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த சந்திப்பின் போது தவெகவிற்கு தமிழகத்தில் உள்ள வாக்கு சதவீதம் குறித்தும், அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என பிரசாந்த் கிஷோர் ஆலோசித்ததாக கூறப்பட்டது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!
அதற்கு பதிலளித்த சீமான் இதெல்லாம் பணக்கொழுப்பு எனக் கூறியது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை கொதிப்படைய செய்தது. நீங்க உடல்ல கொழுப்பு கேள்விப்பட்டிருக்கீங்க பணக்கொழுப்பு கேள்விப்பட்டீங்களா?, வாய் கொழுப்பு அதிகம் அப்படின்னு சொல்லுவாங்க பாத்தீங்களா? இந்த கொழுப்பு அதிகம் அந்த கொழுப்பு அது மாதிரி பணக்கொழுப்பு அதிகமா இருந்தா இதெல்லாம் தேவைப்படும் என பேசியிருந்தார். சீமான் பணக்கொழுப்பு என பேசிய விமர்சனத்திற்கு பதிலடியாக திரள் நிதி திரட்டி ஏமாத்துபவர் என சீமானை தமிழக வெற்றிக் கழகத்தினர் வறுத்தெடுத்தனர்.
சீமானை வச்சி செய்யும் தவெக:
தற்போது இரு தரப்பிற்கும் மீண்டும் மோதல் உருவாகி சமூக வலைதளம் பரபரப்பாகியுள்ளது. சீமானும் வியூக வகுப்பாளரை வைத்து தான் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்ததாக வெளியான புகைப்படத்தை தமிழக வெற்றிக் கழக ஐடி விங்க் மற்றும் தொண்டர்கள் தீயாய் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது விஜய்க்கு வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமிதான் சீமானுக்கும் 2021 தேர்தலின் போது வியூக வகுப்பாளராக இருந்துள்ளார். இது எளிய மக்களுக்கான புரட்சி என்ற டேக்லைன் மூலம் பிரச்சார யுக்தியை வகுத்துக் கொடுத்ததாக தகவல் வெளியானது. அதோடு வியூக வகுப்பாளர் ஜான் ரோக்கியசாமி அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திலும் நாம் தமிழர் கட்சிக்கு
தேர்தல் வியூகம் வகுக்கும் வேலைகளை செய்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதனை சுட்டிக்காட்டி சீமானை நோக்கி தவெகவினர் சரமாரியான கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். விஜயை மட்டும் பணக்கொழுப்பு எனக் கூறிய சீமான் 2021 தேர்தலில் எந்த பணத்தை வைத்து வியூக வகுப்பாளரை நியமித்தார் என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் திடீர் திருப்பமாக ஜான் ஆரோக்கியசாமி தங்களுக்கு எந்த வியூகமும் வகுத்துக் கொடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி மறுத்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சொல்வது என்ன?
இந்த விவகாரம் குறித்து பதிவு போட்டுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி உழைப்பை ஜான் ஆரோக்கியசாமி சுரண்டுவதாக குறிப்பிட்டிருப்பதோடு இப்படித்தான் விஜயையும் நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் போல எனக் கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். நடிகர் விஜயை தம்பி தம்பி என பாவித்து அன்பை அள்ளிக்கொட்டிய சீமான் அரசியல்வாதி விஜயை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண் இரண்டு கண்கள் என விக்ரபாண்டியில் விஜய் பேசிய பிறகு சீமானின் விமர்சனம் இன்னும் பல மடங்கு சீற்றமானது. தொடர்ந்து விஜய் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் குறித்தும் சீமான் காட்டமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
என்னதான் சீமான் சுரண்டி வம்புக்கு இழுத்தாலும் விஜய் தரப்பில் இருந்து பெரிய அளவில் எதிர்வினை இல்லாமல்தான் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வியூக வகுப்பாளரை வைத்து இரு கட்சிகளிடையே எழுந்த மோதல் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. ஜான் ஆரோக்கியசாமி நாம் தமிழர் கட்சிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தாரா? இல்லையா? என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே மாறியிருக்கிறது.
இதையும் படிங்க: பண கொழுப்பு அதிகம்... விஜய்க்கு சீமான் சொன்ன குட்டிக்கதை... என் கூட்டணி இவர்களுடன் மட்டும்தான்..!