4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..! 80 வயது முதியவர் கைது..!
உத்தரப் பிரதேசத்தில் 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சட்டம், சமூகம். மருத்துவம், உளவியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரி்த்துவருவது கவலையை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் புகார் தர தயங்கியதால், வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் குழந்தைகள் என்றும் பாராமல் தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்வதெல்லாம் கொடுமையின் உச்சம். கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்பது ஒருமித்த குரலாக உள்ளது.
தற்போது உத்தர பிரதேசத்தில் ஒரு பகீர் கிளப்பும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி என்ற பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையும் படிங்க: மார்க் வேணுமா? வேலை வேணுமா? மாணவிகளை சீரழித்த பேராசிரியர்.. 30 மாணவிகளின் 60 ஆபாச வீடியோ..!
சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற அவர், சாக்லேட் தருவதாக கூறி ஏமாற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!