வாயை பொத்தி பாலியல் தொல்லை.. இருட்டில் அலறிய பெண் போலீஸ்.! கொடூரன் அதிர்ச்சி செயல்..!
சென்னை பழவந்தாங்கலில் ரயில்வே ஸ்டேஷனில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் போலீஸ் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 11.30 மணிக்கு எக்மோரில் இருந்து மின்சார ரயிலில் பழவந்தாங்கல் சென்றார். பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து சென்றபோது, இருட்டில் ஒரு உருவம் அவரை பின் தொடர்ந்துள்ளது. அச்சமடைந்த அந்த பெண் போலீஸ், வேகமாக செல்ல முயன்ற போது, பின்னால் இருந்து பாய்ந்த அந்த நபர், போலீசின் வாயை பொத்தி, அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துள்ளான்.
அப்போது பெண் போலீஸ் கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் ஓடிவந்து ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவன் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்திய பாலு வயது 40 என்பதும் போதையில் இருந்ததும் தெரியவந்தது. சத்ய பாலு மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் அவர் குற்றப் பின்னணி கொண்ட நபர் என்பதும் தெரியவந்தது. ஒரு வாரம் முன்பு வேலூர் கே.வி.குப்பத்தில் இதே போல் ஒரு வழிப்பறியில் சத்திய பாலு ஈடுபட்டதும் தெரிந்தது. அவன் மீது வழக்கு பதிவு செய்த மாம்பலம் ரயில்வே போலீசார், அவனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவியை பலருக்கு விருந்தாக்கிய கணவன்.. புகாரளித்த பெண்ணை ஓட்டலுக்கு அழைத்த போலீஸ்..!
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. கைதான சத்திய பாலு மீது வழிப்பறி மட்டுமின்றி பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று பெண் போலீஸ் வாயை பொத்தி செயினை பறிக்க முயன்ற சத்திய பாலு, அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து இருக்கிறான். அவனின் கையை கடித்து பெண் போலீஸ் தப்பிக்க முயன்ற போது கீழே தள்ளி விட்டிருக்கிறான். அப்போது தான் பெண் போலீஸ் கூச்சலிட்டதும் சக பயணிகள் ஓடிவந்து காப்பாற்றி உள்ளனர்.
பெண் போலீசுக்கே இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என கூறி, இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வகுப்பறையில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் போக்சோவில் கைது...!