இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம் - முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன்! அண்ணா சீரியல் அப்டேட்!
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைஜெயந்தி வீரா ஒரு FIR-ஐ போட்டு போலீஸ் வேலைக்கு வர முடியாதபடி செய்வதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கௌதம் அவளை வேலைக்கு வராமல் பண்ணா மட்டும் போதுமா? அதோட விட கூடாது என கோபப்படுகிறான். பிறகு பாட்டி வைஜெயந்தி உள்ளே சென்றதும் நீ எதுக்கு உன் அம்மா பெர்மிஷனுக்காக காத்துகிட்டு இருக்க.. நீ பண்ண வேண்டியதை பண்ணு, நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறார்.
அடுத்து பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கிக்கு மருந்து கொடுப்பது பற்றி பேசுகிறாள். அதுக்காக வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல மருந்து கொடுக்கிறதா இருந்தா இங்கே கொடுங்க என்று முத்துப்பாண்டி சொல்கிறான்.
பாக்கியம் அது முறை இல்ல.. வீட்டிற்கு கூட்டிட்டு போய் தான் மருந்து கொடுக்கணும் என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி உன் புருஷனை நம்பி எல்லாம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல இசக்கி தனக்கும் இதெல்லாம் நடக்கணும்னு ஆசையா இருப்பதாக சொல்கிறாள்.
இதையும் படிங்க: Anna Serial: சண்முகம் குடும்பத்திற்கு வந்த புது சோதனை; காத்திருக்கும் திருப்பங்கள்? அண்ணா சீரியல் அப்டேட்!
இதனால் முத்துப்பாண்டி நாளைக்கு காலையில் 4 மணிக்கு நானே அவளை வீட்டிற்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்லி அடுத்த நாள் அழைத்து செல்ல பாக்கியம் தலைக்கு குளிக்க வைத்து சாம்பிராணி போட்டு மருந்து கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: Anna Serial: நியூ என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்.! வீராவுக்கு விழுந்த அறை! அண்ணா எபிசோட் அப்டேட்!