ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.! சாமுண்டீஸ்வரி செம்ம ஹாப்பி? கார்த்திகை தீபம் அப்டேட்!
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் ரேவதிக்கு ஒரு சொட்டர் வாங்கி கொடுக்கிறான், இதனை தொடர்ந்து இவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கின்றனர்.
பிறகு தோழி ரேவதியின் போனை வாங்கி எல்லாரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை சாமுண்டீஸ்வரிக்கு அனுப்பி வைக்கிறாள். இதில் கார்த்தியும் ரேவதியும் ஜோடியாக இருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி சந்தோசப்படுகிறாள்.
மேலும் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் போட்டோவை காட்டுகிறாள். கார்த்திக்கு போன் போட்டு என்ன மாப்பிள்ளை ஹனிமூன் எல்லாம் நல்லபடியா போகுதா என்று விசாரிக்கிறாள். அடுத்து ரேவதியின் தோழி உங்களுக்காக ஒரு பையர் கேம்பைன் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். இருவரும் கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட இவர்களும் ஓகே என சம்மதம் சொல்கின்றனர்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ரேவதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் - விஷயம் இது தானா? கார்த்திகை தீபம் அப்டேட்!
பிறகு ரூமுக்கு வந்ததும் ரேவதி, கார்த்தியிடம் வர முடியாதுனு சொல்ல வேண்டியது தானே என்று திட்ட கார்த்திக் உன்னுடைய ப்ரண்ட் தானே.. நீ சொல்லி இருக்கலாம்ல என பதில் கொடுக்கிறான். அடுத்து இருவரும் பயர் காம்பைன் செல்கின்றனர். அங்கே கேக் ஏற்பாடு செய்து கார்த்திக், ரேவதியை ஜோடி சேர்ந்து வெட்ட வைக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போகிறது? கார்த்திக் நல்லவர் என்பதை புரிந்து கொண்டு அவரை மனதாரா ஏற்று கொள்வாரா? என்பது பற்றி இனிவரும் எபிசோடில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Karthigai Deepam: மாயா சதியால் - சிக்கலில் ரேவதி! கண்டுபிடிப்பான கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!