2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்தில் தொடங்கியது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டி மகளிர் நலன், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை, கல்வித்துறை என அனைத்து துறை சார்ந்த அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதில் குறிப்பாக மக்களின் நேரத்தை சேமிக்கும் வகையில் அசத்தலான திட்டத்தை அறிவித்துள்ளார்.

மனிதவள மேலாண்மை அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு இணைய வழியிலேயே அரசு சேவைகளின் விரைவாகவும் எளிமையாகவும் பெறுவதற்காக தொடங்கப்பட்ட எளிமையான நிர்வாகம் சிம்பிள் கவ் என்னும் திட்டத்தின் கீழ் எட்டு அரசுத் துறையின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பிரதிநிதித்துவம்... மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு...!

வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணைய வழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவிட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் இணைய வழியில் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் முன்னணி கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்களின் விருப்பத்தின் பெயரில் கட்டணமின்றி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பெருந்தரவு வகுப்பாய்வு டேட்டா அனாலிசிஸ் திட்ட மேலாண்மை ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் தகவல் தொடர்பு திறன் கம்யூனிகேஷன் ஸ்கில் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: போட்டுறா வெடிய..! சென்னைக்கு அருகே உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்... இவ்வளவு வசதிகளா?