2025-26ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். அதனால், பொதுமக்களை கவரக்கூடிய பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் நாளைய பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை செய்தி தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது வாடிக்கை. அரசின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் அது நேரலை செய்யப்படும். அப்படி இருந்தும் கூட பொதுமக்கள் அவ்வளவு பேர் ஈடுபாட்டுடன் அதனை தேடிப் பார்க்க மாட்டார்கள். (நம்ம ஆட்களுக்கு அரசியல் என்றாலே தனிநபர் விஷயம் தான், ஆக்கபூர்வ விவாதிக்க புள்ளி விவரங்களை தேட மாட்டார்கள். அப்படி ஒரு வியாதி).. நமது மாநிலத்தின் அடுத்த ஓராண்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய விவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவிற்கு ரொம்ப அலட்சியம்..! நேரடியாக அட்டாக் செய்த ஓ.பி.எஸ்..!

இதன்படி, சென்னையில் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக மையங்கள், மால்கள் போன்றவற்றில் திரைகளை நிறுவி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நேரலை செய்ய தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளதாம்.

சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்வதில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், சமீபகாலமாக அவையும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுங்கட்சி பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள், எதிர்கட்சியினர் பேசுவதை காட்டுவதில்லை என்று மற்றொரு புகாரை அதிமுக கூறிவந்தது. கடந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் வார்த்தை யுத்தத்தில் மோதிக்கொண்ட காட்சிகள் நேரலையாக வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பம் போடலாம், வெளிநடப்பும் செய்யலாம். இருப்பினும் சென்னையில் 100 இடங்களில் பட்ஜெட் தாக்கல் நேரலை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்.. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்..?