இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஒரு பக்கம் இப்படி வயிறு வலியில் துடிக்க இன்னொரு பக்கம் சண்முகம் முருகனுக்கு தண்ணீர் ஊற்றியபடி இருக்கிறான். மறுபக்கம் பரணி இங்க இருந்தால் சரிப்பட்டு வராது சென்னைக்கு கிளம்பலாம் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி செல்கிறாள்.
இசக்கி மயங்கி விழுந்த விஷயம் அறிந்து பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். என்னாச்சு என்று தெரியாமல் பரணிக்கு போன் செய்ய பரணி போனை எடுக்காமல் இருக்கிறாள்.
இதையும் படிங்க: பரணியின் கோபம்.. சண்முகத்தில் பிரார்த்தனை! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஒரு கட்டத்தில் பரணி என்ன பிரச்சனை என்பதை அறிந்து கொள்வதற்காக சண்முகம் வீட்டிற்கு வந்து விடுகிறாள். இசக்கியை பரிசோதனை செய்த பரணி அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து சிவபாலன் கோயிலுக்கு வந்து சண்முகத்திடம் பரணி வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்கிறான். அதன் பிறகு இசக்கி கர்ப்பமான விஷயத்தையும் சொல்ல சண்முகம் இரட்டிப்பு சந்தோஷம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சகுனி வேலை பார்த்த சௌந்தரபாண்டி.. பரணி, சண்முகம் இடையே உருவாகும் பிரிவு - அண்ணா சீரியல் அப்டேட்!