ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் டாக்டரிடம் விசாரிக்க டாக்டர் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு கார்த்திக் வந்து சென்ற விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சந்திரகலா மாயாவுக்கு போன் செய்து கார்த்திக் ரேவதிக்கு முதலிரவு ஏற்பாடு நடக்கும் விஷயத்தை சொல்கிறாள். அதன் பிறகு மாயா ரேவதியை போனில் தொடர்பு கொண்டு மகேஷ் உன்னை காதலித்த பாவத்திற்கு தான் இப்போ கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அவனை எப்படியாவது கண்டுபிடித்து கொடுத்து விடு என்று சொல்கிறாள்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் அத்தை உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து ஏன் நீங்க முன்னாடியே சொல்லல என்று கேட்கிறான். முன்னாடியே கல்யாணத்தை நிறுத்தி உன்னை கட்டி வைக்க போறதா சொல்லி இருந்தா அந்த பரமேஸ்வரி பாட்டி தன்னுடைய பேரனுக்கு கட்டி வைக்க சொல்லி இருப்பாங்க அதனால தான் இப்படி செய்தேன் என சொல்கிறாள்.
இதையும் படிங்க: வேண்டா வெறுப்பில் ரேவதி..! குடோனில் மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதியை முதலிரவுக்கு ரெடியாக சொல்ல ரேவதி இப்போ நான் ரெடி ஆகி ரூமுக்கு போகணும் அதானே என்று கோபப்படுகிறாள். பிறகு பரமேஸ்வரி பாட்டி கொடுத்து அனுப்பிய பாலை சாமுண்டீஸ்வரி தவறுதலாக எடுத்துக் குடிக்கிறாள்.

மயில் வாகனமும் உண்மையை சொல்லி தடுத்து நிறுத்த முடியாமல் அமைதியாக நிற்கிறான். பிறகு ரோகிணிக்கும் கொடுக்கலாம், அப்போ தான் நமக்கும் ஏதாவது நடக்கும் என பாலை எடுத்துக் கொண்டு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே ரேவதிக்கு குழந்தையா? திடீர் ட்விஸ்ட்.. வில்லன் என்ட்ரி! கார்த்திகை தீபம் அப்டேட்!