×
 

Gold Rate Today: இல்லத்தரசிகளுக்கு செம்ம ஷாக்; எகிறி அடிக்கும் தங்கம் விலை; இவ்வளவு உயர்வா? 

தங்கம் விலை சவரனுக்கு 60 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கம் விலை சவரனுக்கு 60 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்: 

சென்னையில் இன்று (வெள்ளி கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 60 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 71 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 127 ரூபாய்க்கும், சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்து 65 ஆயிரம் 016 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையில் தங்கம் கொடுத்த சர்ப்ரைஸ்; இல்லத்தரசிகளே நகை வாங்க தயாரா?

வெள்ளி விலை நிலவரம்: 

சென்னையில் இன்று (வெள்ளி கிழமை) ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து 104 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

காரணம் என்ன? 

 

அமெரிக்கப் பத்திர வருவாயில் ஏற்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வேகமெடுக்கும் தங்கம்; விட்டுக்கொடுக்காத வெள்ளி; பொங்கல் பண்டிகையிலும் ‘கிடுகிடு’ உயர்வு! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share