×
 

உடனே நகைக்கடைக்கு ஓடுங்க... தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி மாற்றம்!

தங்கம் விலை இன்று சற்றே சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது

நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,770 ரூபாய்க்கும், சவரன் 70,160 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (14/04/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 755  ரூபாய்க்கும், சவரனுக்கு 120  ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: இந்திய வரலாற்றிலேயே முதல் முறை; 70 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை...!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 17  ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 550 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 76 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு இரண்டு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு மேலும் இரண்டு முறை வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும், அமெரிக்காவில் மந்தநிலை தவிர்க்க முடியாதது என்ற எதிர்பார்ப்புகளும் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைய காரணமாகின்றன. இந்த வரிசையில், தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து, விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. இருப்பினும், இன்று, தங்கத்தின் விலை ஏற்றம் சரிந்தது.

இதையும் படிங்க: தங்கம் விலை புதிய உச்சம் - இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share