இந்திய வரலாற்றிலேயே முதல் முறை; 70 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை...!
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,745 ரூபாய்க்கும், சவரன் 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (12/04/2024):
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 200 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தங்கம் விலை புதிய உச்சம் - இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்வு!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 27 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 567 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 76 ஆயிரத்து 536 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு இரண்டு ரூபாய் அதிகரித்து 110 ரூபாய்க்கும், கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: ஆத்தாடி!! எகிறி அடிக்கும் தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு