ஆத்தாடி!! எகிறி அடிக்கும் தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்தியா மக்களைப் பொறுத்தவரை தங்கம் ஆபரணமாக மட்டுமின்றி மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த வார இறுதி முதலே தொடர்ந்து 4 நாட்களாக சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை நகை வாங்க காத்திருப்போருக்கு நம்பிக்கையை வழங்கியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வந்ததால் தங்கத்தின் விலை சரிந்து வந்தது. தற்போது அமெரிக்கா, சீனா இடையில் நிலவி வரும் வர்த்தக போர் பதற்றம் மீண்டும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,410 ரூபாய்க்கும், சவரன் 67,280 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: அடிதூள்!! சரசரவென குறைந்த தங்கம் விலை... 4 நாட்களில் மட்டும் இவ்வளவு சரிவா?
தங்கம் விலை நிலவரம் (10/04/2024):
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 150 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 164 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 338 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,312 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து 107 ரூபாய்க்கும், கிலோவிற்கு மூன்றாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்கா - சீனா இடையில் நிலவி வரும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது வழக்கமான பாதுகாப்பு புகலிடமாக கருதும் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ளதால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: குட்நியூஸ்!! தொடர் சரிவில் தங்கம் விலை... இன்னைக்கு மட்டும் இவ்வளவா?