மக்களே தங்கம் வாங்க தயாரா... இன்று மட்டும் எவ்வளவு குறைவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,050 ரூபாய்க்கும், சவரன் 64,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (11/03/2024):
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 020 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: இப்படியே போனா எப்படி?... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் தங்கம்... இன்றும் விலை கிடுகிடு உயர்வு...!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 32 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 749 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 107 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1000 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததையடுத்து தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விண்ணத்தைத் தாண்டி தொடுவாயா?... மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை...!