×
 

ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை ; சவரனுக்கு இவ்வளவு குறைவா?

தாறுமாறாய் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று,ஒரே நாளில் 1280 ரூபாய் சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,560 ரூபாய்க்கும், சவரன் 68,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: வரலாற்று உச்சம்... இனி தங்கம் விலை கேட்டாலே தலை சுத்தும் போலயே...!

 

தங்கம் விலை நிலவரம் (04/04/2024): 

 

இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 160 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 175 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 163 ரூபாய்க்கும், சவரனுக்கு 1400  ரூபாய் குறைந்து 7 ந ஆயிரத்து ந04 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 4 ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், கிலோவிற்கு 400 ரூபாய் குறைத்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: ரம்ஜானில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரே நாளில் கிடுகிடு உயர்வு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share