குட்நியூஸ்!! தொடர் சரிவில் தங்கம் விலை... இன்னைக்கு மட்டும் இவ்வளவா?
தங்கம் விலை தொடர்ந்து இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,285 ரூபாய்க்கும், சவரன் 66,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (07/04/2024):
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 285 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை ; சவரனுக்கு இவ்வளவு குறைவா?
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 27 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 038 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி. ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்று உச்சம்... இனி தங்கம் விலை கேட்டாலே தலை சுத்தும் போலயே...!