நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரன் 71,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (18/04/2024):
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 945 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: இப்படியே போனா எப்படி..? வரலாற்று உச்சம் தொட்ட தங்கம்.. ஷாக்கடிக்கும் சவரன் விலை..!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 28 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 758 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 064 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலையில் 4வது நாளாக ஒரே விலையிலேயே நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

புவிசார் அரசியல் பதட்டங்கள், பணவீக்கத்தின் மீதான அச்சங்கள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் காரணமாக இந்தியாவிலும் உலக அளவிலும் தங்கத்தின் விலை வரலாற்று உச்சம் தொட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆஹா.. சவரனுக்கு இவ்வளவு குறைவா..? தொடர்ந்து சரசரவென சரியும் தங்கம் விலை..!