கடந்த வார இறுதி வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரன் 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (21/04/2024):
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 015 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: உடனே நகைக்கடைக்கு ஓடுங்க... தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி மாற்றம்!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 76 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 834 ரூபாய்க்கும், சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 672 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

கடந்த 5 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போர் பதற்றம் முதலீட்டாளர்களை தங்கம் மீதான முதலீடுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் மத்திய வங்கி தங்க கொள்முதல் ஆகியவை விலைகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றிலேயே முதல் முறை; 70 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை...!