×
 

அடிதூள்... ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா?

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளான இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (15/02/2024): 

கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மக்களே கைநழுவிய பொன்னான வாய்ப்பு... தங்கம் விலை மீண்டும் தடாலடி உயர்வு...!

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,990 ரூபாய்க்கும், சவரன் 63,920 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 890 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 109 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 670 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம் (15/02/2025) :

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. வெள்ளி விலை கிராம் 108 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?

 டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிய காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்...! தங்கம் விலை எதிர்பாராத அளவு குறைவு... நகைக்கடைக்கு உடனே ஓடுங்க...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share