×
 

ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி காலி! ட்ரம்ப் பதவி ஏற்பால் அதிர்ந்த இந்தியப் பங்குச்சந்தை

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அண்டை நாடுகளான கனடா, மெக்சிக்கோவில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிவிதிப்பை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் தங்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்ததால் திடீரென சந்தையில் சரிவு ஏற்பட்டது.


மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடிவில், 1,235 புள்ளிகள் சரிந்து 1.60 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 75,838 புள்ளிகளில் முடிந்தது. கடந்த 7 மாதங்களில் முதல்முறையாக மும்பைப் பங்குச்சந்தை 76 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது இதுதான் முதல்முறையாகும்.


தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி வர்த்தகம் முடிவில் 320 புள்ளிகள் குறைந்து, 1.37 சதவீதம் சரிந்து, 23,024 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று ஒரே நாளில் மட்டும முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.431.60 லட்சம் கோடியாக இருந்தநிலையில், ஒரே நாளில் ரூ.424.30 லட்சம் கோடியாகக் குறைந்தது.கனடா மற்றும் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், சீனப் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று அதிபர் பதவி ஏற்றதும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இதையும் படிங்க: இந்த வார பங்குச் சந்தை ரிப்போர்ட்.. அடிப்படையை ஆராயாமல் முதலீடு செய்யாதீங்க


அது மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் நட்புறோடு இல்லாமல் இருக்கும் நாடுகள், வளைந்து கொடுக்காமல் செல்லும் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் வரிவிதிக்கப்படும் என்று சூசகமாக அதிபர் ட்ரம்ப் அறிவித்து வரிப்போருக்கு தயாராகி இருந்தார்.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்புகள், திட்டங்கள், அதிரடியான முடிவுகள் முதலீட்டாளர்களிடையே பெரிய அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தின. இதனால் பங்குச்சந்தையில் இருந்து தங்கள் முதலீட்டைக் காப்பாற்ற முன்கூட்டியே தங்கள் முதலீட்டை எடுத்தனர். மேலும், பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலட்டாளர்கள் ரூ.48,023 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றனர். இவை அனைத்தும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாகின.


நிப்டியில் ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் துறை 4 சதவீதம் சரிந்தன. உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் ஜோமேட்டோ நிறுவனப் பங்குகள் 11% கடுமையான சரிவைச் சந்தித்தன. அந்த நிறுவனத்தின் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் 3வது காலாண்டு முடிவுகளில் நிகர லாபம் 57 சதவீதம் சரிந்ததையடுத்து, பங்குகள் மதிப்பு குறைந்தது.

இதையும் படிங்க: இந்த வார பங்குச் சந்தை ரிப்போர்ட்.. அடிப்படையை ஆராயாமல் முதலீடு செய்யாதீங்க

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share