நரை முடி வருவதற்கு உடல் சூடு, கடுமையான நோய்கள், ஊட்டச் சத்து குறைபாடு, சக்கரை வியாதி, மன அழுத்தம், ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளிட்ட காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இது வந்தால் நாம் உடனே கடையில் கிடைக்கும் டை களை வாங்கி நரை முடி மட்டுமல்லாது அனைத்து தலை பகுதிகளிலும் தடவி பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு செய்வதால் எஞ்சியுள்ள கருமையான முடிகளையும் நாளடைவில் அது வெள்ளையாக்கி விடும். குறிப்பாக சின்ன வயதிலே அனைத்து முடிகளும் நரைத்து விட்டால் அது மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
PPD, அமோனியா, ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைட் போன்ற கெமிக்கல்கள் அலர்ஜியை ஏற்படுத்தி அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்ட சரும நோய்களை உருவாக்குகிறது. கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல், கண் பார்வை குறைபாடு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு மற்றும் உயிரையே பறிக்கச் செய்யும் கேன்சர் நோய்களையும் உண்டாக்கும் பண்பு கொண்டது. சில நேரங்களில் இது இரத்ததிற்குள் சென்று பெண்களுக்கு ஹோர்மோன் பிரச்சினைகளும் வர காரணமாக உள்ளது. இதனால் குழந்தை பாக்கியம் கூட தடை படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இது போன்று உபாதைகளை ஏற்படுத்தும் கெமிக்கல் டைகளை பயன்படுத்தாமல் இயற்கையான வழியில் முடியை கருப்பாக வைக்கும் பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது..

மருதாணி நில ஆவாரை ஹேர் டை ;
மருதாணி இலை - 1கப்
நில ஆவாரை பொடி - 1/2 கப்
தேநீர் கசாயம் - தேவைக்கு ஏற்ப
தேநீர் கசாயம் செய்முறை ; ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்பளர் தண்ணீர் விட்டு அது கொதிக்கும் போது 2 ஸ்பூன் டீ தூள் போட்டு நன்றாக கொதித்து நிறம் மாறி வந்த பின் அதனை வடிகட்டி எடுத்து வைத்தால் தேநீர் கசாயம் ரெடி.
இதையும் படிங்க: தலை முடி நரைக்குதா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்க
வீட்டில் விளைந்த மருதாணி இலையை நன்றாக அரைத்து அதனுடன் நில ஆவாரை பொடி மற்றும் தேநீர் சேர்த்து நன்றாக கலந்து முடி முழுக்க தடவி ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவி விடலாம். இது போல வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக செய்து வர நரைத்த முடிகள் அனைத்தும் கருமையாக மாறும். சில நேரங்களில் நிரந்தரமாகவே மாறிவிடும். இது தலைக்கு போடுவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

அவுரி மருதாணி ஹேர் டை ;
அவுரி - 4 ஸ்பூன்
மருதாணி இலை பொடி - 4 ஸ்பூன்
நெல்லிக்காய் பொடி - 2 ஸ்பூன்
தேநீர் கசாயம் - தேவைக்கேற்ப
ஒரு பவுலில் அவுரி போடி, மருதாணி பொடி, நெல்லிக்காய் பொடி சேர்த்து அதனுடன் ஏற்கனவே செய்து சூடு ஆர வைத்த தேநீர் கசாயத்தை விட்டு நன்றாக கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த கலவையை தலைமுழுக்க பூசி பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரலாம். இயற்கையான கருமை நிறமாக முடி மாறி அழாகான தோற்றம் கிடைக்கும். ஆண்கள் மீசை, தாடியிலும் கூட தடவலாம். இது மாதம் ஒரு முறை செய்து வரலாம்.

கற்பூரவள்ளி இலை - 20 இலைகள்
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
கருஞ்சீரகம் - 3 ஸ்பூன்
வெந்தயம் - 3 ஸ்பூன்
அவுரி போடி - 3 ஸ்பூன்
ஒரு இரும்பு கடாயில் கற்பூரவள்ளி இலையை நன்றாக கைகளால் கசக்கி விட்டு இந்த இலைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மிக்சி ஜாரில் ஒரு கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து, ஏற்கனவே கடாயிலுள்ள கற்பூரவள்ளி இலையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். இந்த மூன்று பொருளும் கொதித்து தண்ணீர் நன்றாக வற்ற வேண்டும். சூடாறிய பிறகு இதனை வடிகட்டி பிறகு அவுரி பொடியுடன் சேர்த்து கட்டியில்லாமல் ஒரு பேஸ்டாக ஆக கலந்து வைக்கவும். அரை மணிநேரம் கழித்து இந்த கலவையை தலை முடி முழுக்க தடவி ஒரு கொண்டையாக போட்டு, ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பின்பு குளித்து வரலாம். கருஞ்சீரகம், வெந்தயம் தலையிலுள்ள பொடுகை போக்கி மேலும் முடி வளர தூண்டும் பண்பு கொண்டது. இதிலுள்ள கற்பூரவள்ளி இலை உடலை குளிர்ச்சியாக விடாமல் பார்த்து கொள்ளும். சளி, இருமல் உள்ளவர்களும் கூட இந்த டையை பயன்படுத்தி பலன் அடையலாம்.
இதையும் படிங்க: பொடுகு தொல்லையா? இதை பண்ணுங்க...