பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ?
முகத்தில் இயற்கையான பளப்பளப்பு வேண்டும் என்று நாம் தேடி தேடி கிரீம் மற்றும் சீரம்கள் வாங்கி பயன்படுத்தினாலும், கேரட் ஆயில் சிகப்பழகை தருவதோடு பணத்தையும் மிச்சம் செய்ய உதவுகிறது. இது எந்தளவு உண்மை?
முதலில் நாம் கேரட்டில் என்னென்ன சத்துக்கள் அடங்கி உள்ளன என்பதை பார்க்கலாம்...
மாவுசத்து, நார்சத்து, சர்க்கரை, வைட்டமின் - ஏ, வைட்டமின் - கே, வைட்டமின் - சி, வைட்டமின் - பி, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே கேரட் சிறந்த ஊட்டச்சத்து உணவாக பார்க்கப்படுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட கேரட்டை எண்ணெயாக எப்படி செய்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...
தேவையான பொருட்கள் ;
துருவிய கேரட் - 1கப்
தேங்காய் எண்ணெய் - 250 மில்லி
வைட்டமின் ஈ கேப்ஸுல்ஸ் - 2
துருவிய கேரட்டை இரும்பு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக சூடேற்றி கொதிக்க வைக்கவும். கேரட்லிருந்து நீர் முற்றிலுமாக வெடித்து வெளியேறிய பின் அடுப்பின் தீயை குறைத்துக்கொள்ளவும், சற்று கேரட் பொன்முறுவலாக நிறமாறும் சமயத்தில், ஒரு காட்டன் துணியில் இந்த கலவையை வடிகட்டி ஆறவைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸுல்ஸ் இரண்டு சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான், கேரட் ஆயில் ரெடி.
இந்த எண்ணயை தினமும் முகத்தில் தடவி வந்தால் இயற்கையாகவே பளபளப்பான நிறத்தை பெற உதவுகிறது. வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளதால்இறந்த செல்களை புதுப்பிக்கவும், கரும்புள்ளிகள், வயதாகும் போது ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவுகிறது. சுற்றுச்சூழலால் ஏற்படும் suntan சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து, இயற்கையான பளபளப்பை தருகிறது.
கேரட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சருமத்தில் நல்ல நீரேற்றம் பெற்று ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. எனவே வறண்ட சருமத்திற்கு இது நல்ல தீர்வு என்றே சொல்லலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த மிகச் சிறந்த தீர்வாக உள்ளது என்று நிரூபணமாகியுள்ளது.
கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதால் வயதாகும் போது ஏற்படும் சருமக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.இத்தனை நண்மைகள் கொண்ட கேரட்டை எண்ணயை இனி நாமும் செய்து பயனடைவோமா...
இதையும் படிங்க: உடல் எடை குறைக்க போறிங்களா ? ஆளிவிதை அதுக்கு பயன் தரும்